நோன்புப் பெருநாள் பரிசுக்கூடை அன்பளிப்பு

நோன்புப் பெருநாள் பரிசுக்கூடை பெற்றுக்கொண்ட பொது மக்களுடன் பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு .
நோன்புப் பெருநாள் பரிசுக்கூடை பெற்றுக்கொண்ட பொது மக்களுடன் பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு .

பத்து கவான் நாடாளுமன்ற தொகுதியில் 322 வசதி குறைந்த குடும்பத்தினருக்கு நோன்புப் பெருநாள் பரிசுக்கூடை வழங்கப்பட்டன. இந்த அன்பளிப்பு இரண்டாவது முறையாக வழங்குவதாக பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு கூறினார். அரிசி மற்றும் சமையல் பொருட்கள் கொண்ட இந்தப் பரிசுக்கூடையை பினாங்கு சாக்காட் வாரியம் (Zakat Pulau Pinang) மூலம் வழங்கப்பட்டன.
இத்தொகுதியில் அமைந்திருக்கும் குறிப்பிட்ட 10 இடங்களுக்கு கஸ்தூரி பட்டு நேரில் சென்று பொது மக்களுக்குப் பரிசுக்கூடை எடுத்து வழங்கினார். கம்போங் பாரு, கேபுன் சீரே, கம்போங் செகோலா, புலாவ் அமான் மற்றும் பல இடங்களில் பரிசுக்கூடை வழங்கப்பட்டன. நோன்புப் பெருநாள் முன்னிட்டு வழங்கப்படும் பரிசுக்கூடை தொடர்ந்து அடுத்த ஆண்டும் வழங்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். மாநில நம்பிக்கை கூட்டணி அரசு தூய்மையான மற்றும் திறன்மிக்க நிர்வாகத்தை நடத்துகிறது என்றால் மிகையாகாது.
திறன்மிக்க நிதி நிர்வகிப்பால் மாநில அரசு தொடர்ந்து வரவுச்செலவு கணக்கில் கூடுதல் வருமானத்தை ஈட்டுகிறது. இதனைப் பயன்படுத்தி மாணவர், தனித்து வாழும் தாய்மார், ஊன முற்றோர், மூத்தக்குடிகள் என அனைவருக்கும் தங்கத் திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஊக்கத்தொகை பெற்று வருகின்றனர். மாநில அரசு தங்கத் திட்டத்தில் இனபேதமின்றி தகுதிப் பெற்ற அனைவருக்கும் உதவித்தொகை வழங்குகிறது என வரவேற்புறையில் கூறினார்.