பத்து பிரிங்கி ஸ்ரீ பத்ர காளியம்மன் கோவில் தீமிதித் திருவிழா.

ஜாலான் சுங்கை ஒன்று, பத்து பிரிங்கியில் அமைந்திருக்கும் ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயம் 40 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவில் தலைவராக திரு.சுகுமாறன் விளங்குகிறார். முன்னதாக இக்கோவில் பத்து பிரிங்கி பிரதான சாலையில் அமைந்திருந்தது. ‘By The Sea’ மேம்பாட்டுத் திட்டத்தின் காரணமாக இக்கோவில் ஓர் ஆண்டுக்கு முன்பு இடம் மாற்றப்பட்டது. தற்போது இந்த கோவில் நிலப் பிரச்சனையை எதிர்நோக்குகின்றது என்பது வெள்ளிடமலையாகும்.

ஸ்ரீ பத்ர காளியம்மன் கோவில் தீமிதித் திருவிழா கடந்த 21 ஜூலை 2013-யில் நடைபெற்றது. இவ்விழாவில் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினரும் டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் சிங் டியோவும் மற்றும் கொடி மலை நாடாளுமன்ற உறுப்பினர்  சய்ரில் கீர் ஜொஹாரியும் சிறப்பு பிரமுகர்களாகக் கலந்து கொண்டனர். இரு பிரமுகர்களும்  நடைபெற்ற அனைத்து சமய நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தனர்.

 தீமிதித் திருவிழாவில் கொடி மலை நாடாளுமன்ற உறுப்பினர்  சய்ரில் கீர் ஜொஹாரி மற்றும்  கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ  கலந்து கொண்டனர்.

தீமிதித் திருவிழாவில் கொடி மலை நாடாளுமன்ற உறுப்பினர் சய்ரில் கீர் ஜொஹாரி மற்றும் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ கலந்து கொண்டனர்.

இக்கோவிலின் வளர்ச்சிக்காக ரிம5000 மானியமாக வழங்குவதாகவும் பினாங்கு மாநிலத்தில் மத சுதந்திரம் என்றும் காக்கப்படும் என்றும் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ அவர்கள் வரவேற்புரையில் தெரிவித்தார். அதோடு, கோவில் நிர்வாகத்தின் சார்பில் மாண்புமிகு ஜெக்டிப் சிங் டியோ அவர்கள் 50 பெண்களுக்குச் சேலையும் 100 ஆண்களுக்கு வேட்டியும் எடுத்து வழங்கினார். மேலும், கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடியமைப்பு பகுதிகளிலும் வழிபாட்டு தளம் கட்ட நிலம் ஒதுக்கப்படும், இக்கோவில் எதிர் நோக்கியிருக்கும் நிலப் பிரச்சனைக்குத் தீர்வுக் காணும் வகையில் விரையில் ஒரு வீடமைப்புப் பகுதியில் இக்கோவிலுக்கு நிலம் ஒதுக்கித் தருவதாக நம்பிக்கை தெரிவித்தார்.

பிரமுகரை கௌரவிக்கும் வகையில் மாண்புமிகு ஜெக்டிப் சிங் டியோ அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர். பின்னர், கோவில் அன்னதான விருந்து உபசரிப்பிலும்  கலந்து கொண்டார். மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோவிற்கு நன்றி தெரிவிப்பதோடு கோவில் நில பிரச்சனையைக் கூடிய விரைவில் களைவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கோவில் தலைவர் திரு சுகுமாறன் கூறினார்.