பினாங்கு ஆளுநர் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய சமூகச் சேவையாளர்கள் விருது பெற்றனர்

மாநில செயலாளர் டத்தோ பாரிசான் பின் டாருஸ், மாநில ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ உத்தாமா டாக்டர் ஹஜி அப்துல் ரஹ்மான் அபாஸ் , மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் , மாநில சபாநயகர் டத்தோ லோ சூ கியாங்.(வலமிருந்து இடம்)
மாநில செயலாளர் டத்தோ பாரிசான் பின் டாருஸ், மாநில ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ உத்தாமா டாக்டர் ஹஜி அப்துல் ரஹ்மான் அபாஸ் , மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் , மாநில சபாநயகர் டத்தோ லோ சூ கியாங்.(வலமிருந்து இடம்)

பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ உத்தாமா டாக்டர் ஹாஜி அப்துல் ரஹ்மான் அபாசின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய மாநில அளவிலான 1275 பிரமுகர்களுக்கு 5/9/2015 தொடங்கி நான்கு நாட்களுக்கு உயரிய விருதுகள் வழங்கப்பட்டன.
பினாங்கு மாநிலத்தின் உயரிய விருதான D.P.P.N எனும் விருது தேசிய தணிக்கை வாரியத் தலைவரான தான் ஶ்ரீ டத்தோ செத்தியா ஹாஜி அம்ரின் பின் புவாங், D.P.P.N எனும் விருது முன்னாள் கூட்டரசு பள்ளிகளின் நிர்வாகத் தலைவர் தான்ஶ்ரீ டத்தோஶ்ரீ டாக்டர் யாஹாயா இப்ராஹிம், D.M.P.N எனும் டத்தோ விருது பினாங்கு மாநில மனிதவள கழகத் தலைவர் திரு அஜித் சிங் ஆகியோர் பெற்றனர்.
D.M.P.N உயர் விருதினை மருத்துவரும் இராணுவப்படை சேனாபதியாகப் பணியாற்றிய டத்தோ டாக்டர் அருணாசலம் பெற்றார். இவர் பழனியாண்டி தமிழ்ப்பள்ளியின் நிர்வாகக் குழுத்தலைவராகவும், மலேசிய மருத்துவ கூட்டுறவின் பொருளாளர் மட்டுமின்றி பல அரசுசார இயக்கங்களில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். பிரபலத் தொழிலதிபரும், தமிழ் ஆர்வாளரும், சமூகநலத் தொண்டருமான டத்தோ ஹஜி தஸ்லிம் அவர்களுக்கு D.M.P.N எனும் டத்தோ விருது அணிவித்து கொளரவிக்கப்பட்டது. இவர் பல அரசு சார இயக்கங்களில் தலைவராக குறிப்பாக நாம் மலேசியர்கள், தமிழ் உலக கூட்டமைப்பு சங்கம் ஆகிவற்றில் சேவையாற்றுகிறார். தமிழ்மொழியின் மேன்மைக்கும் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் குரல் கொடுக்கும் தஸ்லிம் அவர்கள் தமது துணைவியாருடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்ற இராமநாதன் இரங்கசாமி பிள்ளை D.S.P.N எனும் டத்தோ பட்டம் பெற்றார். இவர் பினாங்கு இந்து அறவாரியத்தின் ஆணையராகவும் தண்ணீர்மலை முருகன் ஆலயம் மற்றும் விநாயகர் ஆலய பொருளாளாராகவும் சேவையாற்றுகிறார். இவர் பல ஆலயங்களின் கட்டிட நிர்மாணிப்புக்கு நிதியுதவி வழங்கியதோடு குழந்தை மற்றும் முதியவர் பாதுகாப்பு ஆசிரமத்திற்கு நில அன்பளிப்பு கொடுத்த கொடைவள்ளல் எனப் பறைச்சாற்றலாம்.
பினாங்கு மாநில ஷான் ஆதரவற்றோர் இல்லங்களை மாநிலத்திலும் தீவிலும் நடத்தி வரும் பிரபல மருத்துவர் எஸ்.பாலகிருஷ்ணனுக்கு பினாங்கு ஆளுநரின் பிறந்தநாளில் D.S.P.N எனும் டத்தோ பட்டம் கொடுத்து கொளரவிக்கப்பட்டார். மக்கள் ஓசை தலைமை ஆசிரியர் திரு இராஜனுக்கு டத்தா பட்டம் வழங்கப்பட்டது. தமிழ்ப்பத்திரிக்கை ஆசிரியருக்கு டத்தோ விருது வழங்கி பினாங்கு மாநில அரசு ஊடகத்துறை வளர்ச்சிக்கு அடிக்கல் நாட்டியுள்ளனர். பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவையில் செயலாளராக விளங்கும் திரு ஜெயராமன்
PJM பட்டம் பெற்றார். மேலும் தாம் சமூகநல தொண்டுகளில் குறிப்பாக இளைஞர்கள் முன்னேற்றத்திற்கு கை கொடுக்க இவ்விருது தூண்டுகோளாக அமைவதாகக் குறிப்பிட்டார்}