பினாங்கு இந்தியர் சங்க ஏற்பாட்டில் அனைத்துலக உதைப்பந்தாட்டம் மீண்டும் மலர்ந்தது

புலாவ் தீக்கூஸ் – பினாங்கு இந்தியர் சங்கம் இந்தியர்களின் சமூகம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்காக பல அரிய திட்டங்களை மேற்கொண்டு வருவது சாலச்சிறந்தது.

இச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஏழாவது முறையாக நடைபெற்ற அனைத்துலக உதைப்பந்தாட்டப் (SOCCER) போட்டியை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்த பின்னர் தமது சிறப்புரையில் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி இவ்வாறு குறிப்பிட்டார்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இச்சங்கத்தின் ஏற்பாட்டில் அனைத்துலக உதைப்பந்தாட்டம் (SOCCER) போட்டி நடைப்பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக பேராசிரியர் குறிப்பிட்டார்.

“பினாங்கு மாநில அரசு பசுமைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் வேளையில் பினாங்கு இந்தியர் சங்கம் நிர்வாகம் இத்திடலின் பசுமையை மேம்படுத்த வேண்டும்.

மேலும், இத்திடலின் அளவு குறைக்கப்பட்டிருப்பதால் இம்முறை ஒரு குழுவில் 7 விளையாட்டாளர்கள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்திடலின் அளவு மற்றும் பசுமையை மேம்படுத்த பல திட்டங்கள் மேற்கொள்ளுமாறு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி வலியுறுத்தினார்.

மேலும், பினாங்கு எப்போதும் பசுமையாகவும் நிலையானதாகவும் நிலைத்திருப்பதை ஊக்குவிக்கிறது என பிறை சட்டமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் வரவேற்பு உரையாற்றிய இரண்டாம் துணை முதல்வர் பினாங்கு இந்தியர் சங்கம் மலேசியாவிலே முதல் இந்தியர் சங்கம் என்றும் 98-ஆண்டுகளாக இச்சங்கம் இந்தியர்களின் மேம்பாட்டிற்கு அயராது பாடுப்பட்டு வருவதைப் பாராட்டினார். இன்னும் வருங்காலங்களில் தற்போது உள்ள புதிய இந்தியர் சங்கம் செயலவை உறுப்பினர்கள் சிறந்த திட்டங்களையும் சேவைகளையும் இந்திய சமுதாயத்திற்குத் தொடர்ந்து வழங்க வேண்டும் என ப.இராமசாமி கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பினாங்கு இந்தியர் சங்கத் தலைவர் டாக்டர் கலைக்குமார், புலாவ் தீக்கூஸ் சட்டமன்ற உறுப்பினர் கிரிஸ் லீ சூன் கிட், எம்.பி.பி.பி கவுன்சிலர் காளியப்பன், உதைப்பந்தாட்டம் ஏற்பாட்டுக் குழுவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

தொடக்க நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கிரீஸ் லீ அனைவரையும் தொடர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுமாறு கோரிக்கை விடுத்தார். மேலும், பினாங்கு இந்தியர் சங்க நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார்.