பினாங்கு இந்து அறப்பணி வாரியம் 344 உயர்க்கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கியது

Admin
whatsapp image 2025 12 21 at 12.50.10

ஜார்ச்டவுன் – 2025 ஆம் ஆண்டு முழுவதும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தால் (LWHPP) வழங்கப்படும் கல்வி உதவித் திட்டத்தின் பலன்களை பல்வேறு நிலைகளைச் சேர்ந்த மொத்தம் 344 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர், இது கல்வி மற்றும் மனித மூலதன மேம்பாட்டிற்கு அதிகாரம் அளிப்பதில் இந்த வாரியத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

 

செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரனின் கூற்றுப்படி, இது போன்ற கல்வி முயற்சிகள், குறிப்பாக வசதிக்குறைந்த பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள், கல்வி நீரோட்டத்திலிருந்து வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்வதில் மிகவும் முக்கியமானவை என்றார்.

 

தனிநபர் மற்றும் சமூக வளர்ச்சிக்கு கல்வியே முக்கிய அடித்தளம் என்பது அசைக்க முடியாத உண்மையாகும்.

 

“பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை நான் மிகவும் பாராட்டுகிறேன், ஏனெனில் இது மாணவர்களுக்கு நிதி நெருக்கடிகளால் சுமையாகாமல் தொடர்ந்து முன்னேற வாய்ப்பளிக்கிறது,” என்று அவர் கூறினார்.

 

வறுமையிலிருந்து விடுப்படுவதற்கான முக்கிய திறவுகோல் கல்வி ஆகும். நிதி நெருக்கடி காரணமாக எந்த மாணவரும் பள்ளியை விட்டு வெளியேறாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம். வழங்கப்படும் ஒவ்வொரு உதவியும் சமூக பங்களிப்புகள் மற்றும் இளம் இந்து தலைமுறையின் எதிர்காலத்தை வலுப்படுத்த மாநில அரசின் உறுதியானப் பங்களிப்பாகும்

 

சமீபத்தில் கொம்தாரில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கல்வி முயற்சியின் ஏழாவது அமர்வில் அவர் இவ்வாறு கூறினார். இதில் பல்வேறு நிலைகளில் மொத்தம் 38 மாணவர்கள் ரிம37,700 ஒதுக்கீட்டை உள்ளடக்கிய ஒரே முறை கல்வி உதவியைப் பெற்றனர்.

 

 

இந்நிகழ்ச்சியில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.என். இராயர், புக்கிட் குலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங்; பாகான் டாலாம் மாநில சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், மற்றும் வாரிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

 

“கல்விக்கான முதலீடு என்பது நாட்டின் எதிர்காலத்திற்கான மிக முக்கியமான முதலீடாகும். பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மேற்கொள்ளும் முயற்சிகள், மலேசிய மடானியின் அறிவும், ஒழுக்கமும், பொறுப்புணர்வும் கொண்ட மனிதவளத்தை உருவாக்கும் இலக்குகளுடன் மிகவும் ஒத்துப்போகின்றன

“நாம் கல்வியில் முதலீடு செய்யும்போது, ​​உண்மையில் அதிக அறிவு, போட்டி மற்றும் வளமான சமூகத்திற்கான அடித்தளத்தை உருவாக்குகிறோம்,” என்று அவர் கூறினார்.

 

மாணவர்களிக்கு கல்வி உதவி மட்டுமின்றி, சமூகத்தின் நலனில் அக்கறை காட்டும் விதமாக, சிகிச்சை பெறும் நோயாளிகளின் இரண்டு குடும்பங்களுக்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் சமூகநலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றது.

 

“இந்த எளிமையான உதவித் தொகை சம்பந்தப்பட்ட குடும்பங்கள் சுமக்கும் சுமையைக் குறைக்கும்,” என்று அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.