பினாங்கு தைப்பூசத்தை அனைவரும் ஒன்றிணைந்து சிறந்த முறையில் கொண்டாடுவோம் – மாநில முதல்வர்

Admin
  • இவ்வாண்டு பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் 233-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சட்டிப்பூசம் என்றழைக்கப்படும் முதல்நாள் கொண்டாட்டத்தில் இன்று பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அங்கு அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலுக்கு வருகை மேற்கொண்டார்.
  •  


    இந்த ஆண்டு மக்களின் தாகம் மற்றும் பசியைப் போக்கும் வண்ணம் 160 தண்ணீர் பந்தல்கள் நிருவப்பட்டுள்ளன. பினாங்கு இந்து அறப்பணி வாரிய வளாகத்தில் இருந்து பினாங்கு மாநில முதல்வர் சாவ் கொன் யாவ், பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, இந்து அறப்பணி வாரிய ஆணையர்கள், மாநில அரசியல் தலைவர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆலய நிர்வாகத்தினருடன் அனைத்து தண்ணீர் பந்தலுக்கும் வருகை மேற்கொண்டு இந்தியர்களுக்கு தைப்பூச வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். மாநில முதல்வருக்கு மேள வாத்தியங்களுடன் மாலை அணிவித்து மரியாதைச் செய்யப்பட்டது.

  •  

  • இவ்வாண்டு தைப்பூசத் திருவிழாவை சிறந்த முறையில் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டும்’, என செய்தியாளர் சந்திப்பில் தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ்  குறிப்பிட்டார். இவ்வாண்டு கொண்டாட்டம் கோடிக்கனக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுப்பயணிகளை கவரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    மேலும், பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரிய தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி பக்தகோடிகள் ஆலய நிர்வாகம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி அமைதியான சூழலில் தைப்பூசத்தை கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனிடையே, தங்க இரதம் மூன்றாம் நாளான செவ்வாய் கிழமை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் இருந்து குயின் ஸ்ரிட் மாரியம்மன் ஆலயத்திற்கு மாலை 6 மணி அளவில் புறப்படும் என அறிவித்தார்.

    இதனிடையே, பினாங்கு அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்
    தலைவர் டத்தோ சுப்பிரமணியம் அனைத்து வகையிலும் உதவிகளும் ஒத்துழைப்பும் நல்கிய பினாங்கு மாநில அரசுக்கு தனது நன்றியை நவிழ்ந்தார்.