பினாங்கு மக்களின் நன்மைக்காக பல்நோக்கு மண்டபம் அமைக்கப்படும்

Admin

பினாங்கு இந்தியர் சங்க உறுப்பினர்கள் பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அலுவலகத்திற்கு மரியாதை நிமித்தம் வருகை மேற்கொண்டனர்.

பினாங்கு இந்தியர் சங்க உறுப்பினர்கள் பினாங்கு முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அலுவலகத்திற்கு மரியாதை நிமித்தம் வருகை மேற்கொண்டனர்.

பினாங்கு இந்தியர் சங்கத் தலைவர் லிங்கநாதன், துணை தலைவர் டத்தோ குவணராஜு, டாக்டர் கலைகுமார், பொருளாளர் டாக்டர் ஜெயராம், செயலாளர் சோமசுந்தரம், சங்க உறுப்பினர்களான குமார், இரவீந்திரன், எல்வின் இராஜ், ரீச்சட், எந்தோனி இரப்ஹோல் மற்றும் நடராஜன் ஆகியோர் இன்று வருகையளித்தனர்.

பாகான் ஜெர்மாலில் அமைந்திருக்கும் பினாங்கு இந்தியர் சங்கம் 2 மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொண்டு வருகிறது. முதல் மேம்பாட்டுத் திட்டமான நான்கு மாடிக் கொண்ட அக்கட்டிடம் அச்சங்க வளாகத்திலே அமைக்கப்படுகிறது. இதன் மேம்பாட்டு பணி 75% நிறைவுக்கண்டுள்ளது பாராட்டக்குரியதாகும்.

அதே வளாகத்தில் கட்டப்படும் பல்நோக்கு மண்டபப் பணிகள் 25% மட்டுமே நிறைவுப்பெற்றுள்ளது. பணப் பற்றாக்குறை காரணமாக இத்திட்டம் தொடர்ந்து மேற்கொள்ள முடியாத அவலநிலையில் இருப்பதை சுட்டிக் காட்டினர்.

பினாங்கில் பல்நோக்கு மண்டபம் குறைவாக இருப்பதால் இப்புதிய பல்நோக்கு மண்டபத்தை அமைக்கவிருப்பதாக துணை தலைவர் குவணராஜு தெளிவுப்படுத்தினார். பொதுமக்களின் நன்மைக்காக பொது நிகழ்வுகள், விளையாட்டு அரங்கம் என அனைத்து நவீன வசதிகளும் கூடிய பல்நோக்கு மண்டபம் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில முதல்வருடனான இச்சந்திப்பு கூட்டத்தின் போது இப்புதிய மண்டபம் அமைக்க பினாங்கு இந்து சங்கம் மாநில அரசிடம் நிதியுதவி கோரினர். முறையான கடிதம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர் மாநில அரசு இதனை பரிசீலிக்கும் என தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் நம்பிக்கைத் தெரிவித்தார்.

பினாங்கு இந்து சங்க தலைவர் மாநில முதல்வர் சாவ் கொன் யாவ்விற்கு பொன்னாடை போற்றி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

செய்தி : ஜெ.பத்மாவதி
படம்: அட்லீனா ராஹாயு அமாட் ரஷி