பினாங்கு மாநிலத்தில் தமிழ்க் கல்வியை மேம்படுத்த இணக்கம் -டத்தோஸ்ரீ சுந்தராஜு

Admin
img 20231213 wa0061

பட்டர்வொர்த் -பினாங்கு மாநில மேம்பாட்டுக் குழு ஆதரவில் பினாங்கு மாநிலத்திலுள்ள 28 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 5,330 மாணவர்களுக்கு 15,990 பயிற்சிப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

பினாங்கு மாநில மேம்பாட்டுக் குழு
தலைவருமான டத்தோஸ்ரீ எஸ்.சுந்தராஜூ கூறுகையில், தமிழ்ப் பாடத்திற்கான பயிற்சி புத்தகங்கள் குறிப்பாக கருத்துணர்வு புத்தகம், இலக்கணப் புத்தகம், இலக்கியப் புத்தகம் விநியோகிக்கப்பட்டன, என்றார்.
img 20231213 wa0065

பினாங்கு மாநிலத்தின் வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினருமான சுந்தராஜூ, மொத்த 5,330 மாணவர்களில், சுமார் 50.63 சதவீதம் அல்லது அவர்களில் மொத்தம் 2,699 மாணவர்கள் குறைந்த வருமானம் பெறுபவர்கள் அல்லது பி40 குழுவை சேர்ந்தவர்கள் என்று கூறினார்.

“பினாங்கில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்ற புத்தகங்களை நாங்கள் வழங்குவது இதுவே முதல் முறை, இது எதிர்காலத்திலும் தொடரும்.

“இந்த முயற்சியானது பினாங்கில் தமிழ்மொழிக் கல்வியின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த பினாங்கு தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு குழுவால் அமைக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றாகும்.
20231213 112515

“இந்த முயற்சியின் முக்கிய நோக்கமானது, மாணவர்கள் 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி அமர்வின் இறுதித் தேர்வுக்குப் போதுமான அளவு தயாராக உதவும்” என்று அவர் கூறினார்.

மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் பயிற்சி புத்தகங்களை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், அடுத்த ஆண்டு பினாங்கில் உள்ள 52 தேசிய இடைநிலைப் பள்ளிகளில் மலேசிய கல்வி சான்றிதழ் (எஸ்.பி.எம்) தேர்வெழுதும் மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக தமிழில் உள்ள 600 பயிற்சிப் புத்தகங்களையும் அவரது அமைப்பின் கீழ் வழங்கியதாக சுந்தராஜூ கூறினார்.

“ஒட்டுமொத்தமாக 5,930 தமிழ்ப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்மொழி பாடம் தொடர்பான பயிற்சி புத்தகங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரிம65,000 செலவிட்டுள்ளது.

“இது போன்ற முயற்சிகள் அவர்களின் கல்வி அடைவுநிலையை மேம்படுத்துவதோடு, எதிர்காலத்தில் எஸ்.பி.எம் தேர்வில் குறிப்பாக தமிழ் பாடத்தை எடுக்க அதிக மாணவர்களை ஊக்குவிக்கும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.