பினாங்கு மாநிலம் மிக குறைவான கடன் கொண்டுள்ளது.

மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்
மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்

2008-ஆம் ஆண்டு வரை பினாங்கு மாநிலம் கூட்டரசு அரசாங்கத்திடம் ரிம625.4 லட்சம் கடன் பெற்றிருந்தது. ஆனால், 2008-ஆம் ஆண்டு நம்பிக்கை கூட்டணி அரசு ஆட்சிப்பீடம் அமைத்தப்பின் இக்கடன் ரிம69.4 லட்சத்திற்குக் குறைந்துள்ளது என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.


மாநில அரசின் நேர்மை மற்றும் சிறப்பு மிக்க நிர்வாகமே இக்கடன் குறைப்புக்குக் காரணம் என்றார். மாநில அரசாங்கம் இலஞ்ச ஊழல் இன்றி நிர்வாகம் நடத்துவதால் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் வருமானமும் இலாபத்தையும் ஈட்டுகிறது.

கூட்டரசு அரசாங்கத்திடம் 13 மாநிலங்கள் பெற்றுள்ள மொத்தக் கடன் ரிம16.8 பில்லியன், அதில் மிகக் குறைவான கடன் தொகை பெற்ற மாநிலமாக பினாங்கு (ரிம69.4 லட்சம்) திகழ்கிறது என அகம் மகிழ தெரிவித்தார். எனவே, பினாங்கு மாநிலம் கூட்டரசு அரசாங்கத்திடம் 0.41% மட்டுமே கடன் பெற்றுள்ளது என்றார்

கூட்டரசு அரசாங்கம் கடந்த 20 ஆண்டுகளாக வரவுச்செலவில் நிதிப் பற்றாக்குறை எதிர்நோக்குவதோடு, அதன் கடனும் 100%-க்கும் கூடுதலாக உயர்ந்துள்ளது என்றார்.

document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);