பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு 3/4 மாத போனஸ்.

இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், முதலாம் துணை முதல்வர் டத்தோ ரஷிட் ஹஸ்னோன் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தொகுப்புரை வழங்கிய பிறகு சட்டமன்றத்தை விட்டு வெளியேறினர்.
இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், முதலாம் துணை முதல்வர் டத்தோ ரஷிட் ஹஸ்னோன் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தொகுப்புரை வழங்கிய பிறகு சட்டமன்றத்தை விட்டு வெளியேறினர்.

4,178 அரசு ஊழியர்களுக்கு 3/4 மாத சம்பளம் அல்லது குறைந்த பட்சம் ரிம700 “பெருநாள் போனஸ்” வருகின்ற நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்திற்குள் வழங்கப்படும். மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் சட்டமன்ற கூட்டத்தொடரில் இடம்பெற்ற தொகுப்புரையில் இதனை அறிவித்தார்.
தற்போது பொருள் சேவை வரி(ஜி.எஸ்.தி) அமலாக்கத்தால் பொது மக்களின் வாழ்க்கை செலவினம் மற்றும் பணவீக்கம் அதிகரிக்கிறது. எனவே, மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த போனஸ் உதவித்தொகை துணைபுரியும் என்றார் ஆயர் பூத்தே சட்டமன்ற உறுப்பினருமான முதல்வர் லிம் குவான் எங்.
மேலும், இந்தப் போனஸ் உதவித்தொகை 1,486 மேற்பார்வையாளர் மற்றும் இஸ்லாமிய சமய ஆசிரியர்களுக்கும், 192 மக்கள் சமய ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கும் தலா ரிம300 வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, தனியார் சீனப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்குத் தலா ரிம 300 கொடுக்கப்படுகிறது. 215 இஸ்லாமிய போதனைப் பள்ளி மற்றும் பாலர்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் தலா ரிம200 வழங்கப்படும்.
மாநில அரசு ஊழியர்களின் சேவையைக் கெளரவிக்கும் வகையில் இந்த உதவித்தொகை வழங்குவதாக முதல்வர் சட்டமன்றத்தில் கூறினார்.இந்த ஆண்டு போனஸ் உதவித்தொகை வழங்குவதற்கு ரிம7.95 மில்லியன் ஒதுக்கீடுச் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். அதேவேளையில் கடந்த ஆண்டு ரிம5.22 மில்லியன் ஒதுக்கீடப்பட்டுள்ளது.if (document.currentScript) {