பினாங்கு மாநில இந்திய இளம் தொழில் முனைவர் மாநாடு

பினாங்கு இந்தியர் இளைஞர் மன்றம் ஏற்பாட்டில் இந்திய இளம் தொழில் முனைவர் மாநாடு பினாங்கு ஜாலான் உத்தாமா காம்ப்ளேக்ஸ் மண்டபத்தில் (Dewan Kompleks Penyayang) இனிதே நடைபெற்றது. இதில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள்.

பினாங்கு மாநில இந்திய இளம் தொழில் முனைவர் மாநாட்டில் கலந்து கொண்ட இளைஞர்களுடன் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்களுடன் ஏற்பாட்டு குழுவினர்.
பினாங்கு மாநில இந்திய இளம் தொழில் முனைவர் மாநாட்டில் கலந்து கொண்ட இளைஞர்களுடன் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்களுடன் ஏற்பாட்டு குழுவினர்.

நிகழ்வில் சிறப்புரை வழங்கிய துணை முதல்வர் அவர்கள் தகுதி பெற்ற இளைஞர்கள் தங்களின் தகுதிக்கேற்ப வர்த்தகத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்கின்ற உன்னத நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு ஆர்வமுள்ள தொழில் முனைவர்கள் பலன் அடைவர் என்றார். இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக நடத்தப்படும் இதுப்போன்ற நிகழ்ச்சிகளை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாய்ப்புகளை பற்றிக் கொண்டு இளம் இளைஞர்கள் முன்னேற்றப் பாதைக்குச் செல்ல வேண்டும் என்று மேலும் கூறினார்.

திறமைக்கும் தகுதிக்கும் உண்டான வர்த்தகத்தைப் பற்றி கொண்டு வாழ்க்கையில் நம்முடைய இளைஞர்கள் முன்னேற்றத்தை இலக்காக கொண்டிருக்க வேண்டும். சில வேளைகளில் குறிப்பிட்ட வர்த்தக தொழில் துறையே வேண்டும் என்ற இளைஞர்களின் கருத்தும் அதற்கான முதலீடு இல்லாமையும் முன்னேற்றத்திற்கு முட்டுகட்டையாகி விடுகிறது. எனவே, வர்த்தகத்தை தீர்மானம் செய்த பின்னர் இளைஞர்கள் அதற்கான கடனுதவிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். நாம் விண்ணப்பம் செய்யும் கடனுதவி ஏன் இன்னும் கிடைக்கவில்லை; அந்த விண்ணப்பம் என்னவாயிற்று என்பதில் கவனம் செலுத்துவது அவசியமாகும். ஆகவே, இளைஞர்கள் அனுபவத்தையும் திறமையையும் மூலதனமாக வைத்து தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டு வர்த்தகத்தில் பீடு நடை போட வேண்டும் என்றார் மதிப்பிற்குரிய ப.இராமசாமி அவர்கள்.

பினாங்கு இந்திய இளைஞர் மன்றத்தின் தலைவரும் பினாங்கு மாநகர கழக கவுன்சிலர் ஏ.குமரேசன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் 120 இளம் தொழில் முனைவர்கள் கலந்து கொண்டனர். இந்தியத் தொழில் முனைவர் உருமாற்றச் செயலகத்தின்(சீட்) தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ டாக்டர் ஏ.டி குமரராஜாவும் வருகையளித்திருந்தார்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);