பினாங்கு மாநில சீனப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு 2017

மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்

பினாங்கு மாநிலத்தை கூட்டரசு மாநிலமாக மாற்றும் திட்டத்தை முறியடிப்பதாக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கூறினார்.

நமது மாநில ஆளுநரை நேசிப்பதாகவும், பினாங்கு வாழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட பினாங்கில் வசிக்கும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வேண்டுமே தவிர புத்ராஜெயா அரசியல் தலைவர்கள் அல்ல என்றார்.

எனவே, மாநில அரசு பினாங்கு மாநிலத்தை பாதுகாக்கும் பொருட்டு நான் பினாங்கை நேசிக்கிறேன்எனும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளதுஎன மாநில சீனப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சபாநாயகர் டத்தோ லாவ் சூ கியாங், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில செயலாளர் டத்தோ ஶ்ரீ பரிசான் டாருஸ், அரசாங்க ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். சீனப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் , பினாங்கு மாநில 1.6 லட்சம் மக்களுக்காக 8 ஆண்டுகளாக தொடர்ந்து வரவுச்செலவு கணக்கில் கூடுதல் வருமானமாக ரிம574 லட்சம் பெறுகிறது; இலஞ்ச ஊழல் இன்றி தங்கத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது மற்றும் பொருள் சேவை வரி விலக்கு ரிம55.19 லட்சம் இடம்பெறுகிறது.

சீனப் பெருநாள் உபசரிப்பில் பல்வகை உணவு வகைகள் மட்டுமின்றி வருகையாளர்களின் மனதை ஈர்க்கும் வகையில் பல்லின மக்களின் பாரம்பரிய மிக்க கலாச்சார நடனங்களும் இடம்பெற்றன.