பினாங்கு மாநில பொருளாதார உருமாற்றுத் திட்டத்தைச் செயல்படுத்த பி.எஸ்.ஆர் திட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்படும்- முதல்வர் 

ஜார்ச்டவுன்- பினாங்கு தெற்கு தீவுகளை  ( பி.எஸ்.ஆர்) மேம்படுத்தும் திட்டம் வருகின்ற 50 ஆண்டுகளில் இம்மாநிலத்தின் பொருளாதார உருமாற்றுத் திட்டத்தைச் செயல்படுத்த துணைப்புரியும். இதன் மூலம் இம்மாநிலம் அனைத்துலக சேவை மற்றும் உற்பத்தி மையமாக உருமாற்றம் காணும். பி.எஸ்.ஆர் திட்டத்தின் வாயிலாக 4,500 ஏக்கர் நிலம் உருவாக்கம் கண்டதுடன் அதில் இலகு இரயில் சேவை(எல்.ஆர்.டி), டிரேம் மற்றும் நெடுஞ்சாலை இணைக்கும் இப்பிரதான தலத்தில் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டத்தையும் நிர்மாணிக்க இணக்கம் கொண்டுள்ளது. இந்த உருமாற்றத் திட்டம் அதிகமான அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்யவும் வழிவகுக்கும்.

  • பினாங்கு போக்குவரத்து பெருந்திட்டத்தின் ஒரு பகுதி திட்டத்தைச் செயல்படுத்த கூட்டரசு அரசாங்கத்திடம் ரிம 10 பில்லியன் நிதியுதவி விண்ணப்பம் செய்தும் பி.எஸ்.ஆர் திட்டம் அமல்படுத்தப்படுமா என்ற கெபுன் பூங்கா சட்டமன்ற உறுப்பினர் ஒங் கான் லீ தொடுத்த வாய்மொழி கேள்விக்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ்  இவ்வாறு பதிலளித்தார்.பி.எஸ்.ஆர் திட்டம் அமல்படுத்துவதன் மூலம் தீவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியிலிருந்து மேற்கு பகுதி வரையில் மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளூர் மக்கள் குறிப்பாக மீனவர்கள் மற்றும் அடுத்த தலைமுறையினரின் வாழ்வாதாரம் அதிகரிக்க உதவும். 

    மாநில அரசு கூட்டரசு அரசாங்கத்திடம் விண்ணப்பித்த ரிம10 பில்லியன் நிதி ஒதுக்கீடு எல்.ஆர்.டி இரயில் சேவை, பாகம் 1 செயல்படுத்த உதவும். இந்நிதி ஒதுக்கீடு பெறுவதற்குக் கூட்டரசு அரசாங்கம் பினாங்கு மாநில அரசு  ‘Special Purpose Vehicle’ அமைத்து கூட்டரசு அரசின் உத்திரவாதத்துடன் ‘மசோதா’ (bon) வெளியிட வேண்டும். இருப்பினும் மாநில அரசு 12-வது மலேசிய திட்டத்தின் கீழும் நிதி ஒதுக்கீடு கோரி விண்ணப்பிக்கும் என 

    பதினான்காவது சட்டமன்றக் கூட்டத்தொடரின் இரண்டாவது தவணைக்கான இரண்டாவது சந்திப்புக் கூட்டத்தில் முதல்வர் விளக்கமளித்தார். 

    பினாங்கு மாநில எதிர்கால பொருளாதார மேம்பாடு கருத்தில் கொண்டு பி.எஸ்.ஆர் திட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்படும் என உறுதியளித்தார்.