புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழாக் கண்டது.

Admin

சுங்கை டுவாவில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா செய்து வைத்தார் பினாங்கு மாநில முத்ல்வர் மேதகு லிம் குவன் எங் அவர்கள். இப்புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் பினாங்கு வாழ் 1.6 கோடி மக்களுக்கு உயிர் நாடியாக கருதுவதாக தமது சிறப்புரையில் மாநில முதல்வர் தெரிவித்தார்.

சுங்கை டுவா நீர் சுத்திகரிப்பு நிலையம்
சுங்கை டுவா நீர் சுத்திகரிப்பு நிலையம்

இப்புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் ஏழாவது முறையாக மேம்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 12வது தொகுப்பாக மேம்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு மாநில அரசு ரிம54.9 கோடி செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சுங்கை மூடா ஆணையிலிருந்து பினாங்கிற்கு கிடைக்கப்பெறும் மூல நீரில் 80% சுங்கை டுவா நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இதனிடையே, செய்தியாளர் சந்திப்பில் பேசிய பினாங்கு நீர் விநியோக வாரிய தலைமை நிர்வாக அதிகாரி பொறியியலாளர் ஜசானி மைடின்சா அவர்கள் தேசிய அளவில் பினாங்கு மாநிலமே 36.3% அதிகமான நீர் சுத்திகரிப்பு திட்டத்தை அமல்படுத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநில முதல்வர் பினாங்கு மாநிலம் ரிம2 கோடி செலவில் பேராக் ஆற்றிலிருந்து மூல நீர் பெறும் திட்டத்தின் அமலாக்கத்திற்கு மத்திய அரசு தலையிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதன்வழி, 2020 நூற்றாண்டில் பினாங்கு மாநிலம் போதிய நீர் கையிருப்பு இருப்பதை உறுதிச்செய்ய இத்திட்டம் பெரும் துணை புரியும் என நம்பிக்கை தெரிவித்தார். இவ்வாண்டு சூப்பர் எல் நினோ பருவமாற்றத்தில் மலேசியாவின் அதிகமான மாநிலத்தில் நீர் பங்கீட்டு முறையை அமல்படுத்திய வேளையில் பினாங்கு நீர் விநியோக வாரியத்தின் திறமையான நிர்வாகத்தின் கீழ் அந்த அவலநிலை பினாங்கிற்கு ஏற்படவில்லை என சுட்டிக்காட்டினார்.