புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு உதவித்தொகை வழங்கியது

பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

கடந்த 11/4/2015-ஆம் நாள் கடுமையாக வீசியப் புயல் காற்றினால் உஜோங் பத்து குடியிருப்புப் பகுதி பாதிக்கப்பட்டது. கடுமையானப் புயல் காற்றினால் மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டு வீடுகளின் கூரைகளில் விழுந்தன. வீட்டைத் தூய்மைச் செய்து கொண்டிருந்த அப்பகுதி குடிமக்களில் ஒருவரான இரா. தெய்வானை,56 மரங்கள் தனது வீட்டின் கழிப்பறை மற்றும் சமையல் அறையில் விழுந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியதாக செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

தற்போது தெய்வானையின் குடும்பத்தினர் வரவேற்பறையில் வாழ்வதாகவும் அண்டைஅயலார் உதவியுடன் உணவுப் பெறப்படுவதாகவும் அவரது மகன் கலைச்செல்வம்,28 கூறினார். தாமான் இண்டராவாசே சமூக மேம்பாட்டு மற்றும் பாதுகாப்பு கழகத்தினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து குப்பைகள் மற்றும் மரங்களை அகற்ற உதவிப்புரிந்தனர். புயல் காற்றினால் பாதிக்கப்பட்ட ஐந்து குடும்பங்களில் திருமதி தெய்வானை குடும்பமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மாநில முதல்வரும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான மேதகு லிம் குவான் எங் பாதிக்கப்பட்ட பொது மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு ரிம200 இருந்து ரிம1000 வரையிலான உதவித்தொகை வழங்கினார்.

மாநில முதல்வர் பாதிக்கப்பட்ட பொது  மக்களைச் சந்தித்தார்
மாநில முதல்வர் பாதிக்கப்பட்ட பொது மக்களைச் சந்தித்தார்

இச்சம்பவம் துரதிருஷ்டவசமாக ஏற்பட்டாலும் பொது மக்களுக்கு காயம் ஏற்படவில்லை என்றார் முதல்வர். பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன் அவர்களும் வருகைப்புரிந்து பொது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினார். மாநில சமூகநலத்துறை மூலம் பாதிக்கப்பட்ட பொது மக்களின் வீடுகளின் பழுதுப்பார்க்கும் வேலைகள் கூடிய விரைவில் தொடங்கப்படும் .