பொதுப் போக்குவரத்து சேவை மேம்படுத்தப்படும் – மாநில முதல்வர்.

 

செபெராங் பிறை வாடகைக் கார் ஓட்டுனர்களுக்கு மேதகு லிம் குவான் எங் மாதிரி காசோலையை வழங்குகிறார்.
செபெராங் பிறை வாடகைக் கார் ஓட்டுனர்களுக்கு மேதகு லிம் குவான் எங் மாதிரி காசோலையை வழங்குகிறார்.

பினாங்கு வாழ் 2,365 வாடகைக் கார் ஓட்டுனர்களுக்கு மாநில அரசு ஊக்கத்தொகை வழங்கியது. நோன்புப் பெருநாளை முன்னிட்டு பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசாங்கம் வாடகைக் கார் ஓட்டுனர்களுக்கு தலா ரி.ம 300-ஐ வழங்கியது பாராட்டக்குறியது. இந்த சன்மானம் வழங்குவதற்காக மாநில அரசு ரி.ம 732,900 ஒதுக்கியது என்று மேதகு லிம் குவான் எங் கூறினார். கடந்த 13வது பொதுத் தேர்தலின் போது மாநில அரசு தேர்தல் அறிக்கையில் சுற்றுலா துறையின் சேவை தரத்தை மேம்படுத்த வாடகைக்கார் ஓட்டுனர்களுக்கு ஒரு வருடத்திற்கு ரி.ம 600 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்ததைத் தொடர்ந்து கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து இச்சன்மானத்தை வழங்குகிறது.

அதன் தொடக்கமாக, இவ்வாண்டின் முதல் தவணைக்கான சன்மானம் ஜூன் மாதம் ரி.ம 300-ரும் இரண்டாம் தவணை ஆகஸ்டு மாதத்தில் மற்றொரு ரி.ம 300 வழங்கப்பட்டதாகக் கொம்தார் “ஏ” அரங்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் . துரித வளர்ச்சியின் காரணமாக பொதுப் போக்குவரத்து மேம்படுத்தி பினாங்கு மாநிலத்தை அனைத்துலக தரத்தில் ஒரு முழுமையான பொது போக்குவரத்துச் சேவையை வழங்கும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார் முதல்வர். வாடிக்கையாளர்களிடம் பணிவாகவும் முக மலர்ச்சியுடனும் சேவை வழங்குவதை வாடகைக்கார் ஓட்டுனர்கள் கொள்கையாக்கிக் கொள்ள வேண்டும் என மேலும் கேட்டுக்கொண்டார்.

பொதுப் போக்குவரத்து திட்டத்தை இரயில், LRT,MRT என மேம்படுத்த தற்போது மாநில அரசு Project Delivery Patners எனும் நிறுவனத்தை அமைத்துள்ளது. 2030-ஆம் ஆண்டில் சிறந்த பொது போக்குவரத்து சேவையை பினாங்கு கொண்டிருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். இதனிடையே, ரிம 6.3 பில்லியன் செலவில் மூன்று நெடுஞ்சாலைகளும் பெர்சியாரான் கெர்னி மற்றும் லிம் சோங் யூ பிரதான சாலையை இணைக்கும் கடல் வழி பாதை நிர்மாணிக்கப்படவுள்ளது பாராட்டக்குரியதாகும். இந்நிகழ்வில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.} else {