பொது மக்கள் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் பெறுவதற்கு விண்ணப்பங்களைப் புதுப்பிக்க வலியுறுத்து

Admin
img 20240405 wa0043

ஜார்ச்டவுன் – பினாங்கு வீட்டுவசதி வாரியம் விண்ணப்பதாரர்கள் தங்கள் தரவை மாநில வீட்டுவசதி தகவல் அமைப்பில் (HIS) புதுப்பிக்குமாறு மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

பினாங்கு வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு கூறுகையில், இந்த ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி வரை, வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளுக்கான ஏ, பி மற்றும் சி வகைகளில் 42,160 விண்ணப்பங்கள் இத்தகவல் அமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“இருப்பினும், விண்ணப்பதாரர்கள் தங்கள் தரவை கணினியில் புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்த ஆண்டு ஏப்ரல்,3 ஆம் தேதி நிலவரப்படி, மொத்தத்தில் 19.30% அதாவது 8,135 விண்ணப்பதாரர்கள் மட்டுமே இதனை புதுப்பித்துள்ளனர்.

“பினாங்கு வீட்டுவசதி வாரியம்
தேர்வு செயல்முறையைச் சீராக்க
விண்ணப்பதாரர்கள் தங்கள் தரவை புதுப்பிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.

“மேலும், விண்ணப்பதாரர்கள் HIS முறையில் தகவலைப் புதுப்பிப்பது செயலில் உள்ள விண்ணப்ப நிலை மற்றும் தகுதிக்கு முக்கியமானது. நாங்கள் விண்ணப்பதாரர்கள் தங்களின் தரவுகளைக் கணினியில் புதுப்பிக்குமாறு ஊக்குவிக்கிறோம், குறிப்பாக அவர்களது திருமண தகுதி மற்றும் மாத வருமானம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்,” என்று அவர் கொம்தாரில் நடந்த ஊடக சந்திப்பில் கூறினார்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை வழங்கும் செயல்முறையை செயல்படுத்தவும், மாநில அளவில் வீட்டுவசதி கொள்கைகளை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்தவும், மடானியின் முன்முயற்சிகள், பினாங்கு2030 இலக்கு மற்றும் பினாங்கு ஒற்றுமை அரசாங்கத் தேர்தல் அறிக்கை ஆகியவற்றுக்கு இணங்க வீடமைப்பு தேர்வு செயல்முறை குழுவினர் (HOPE)
அமைக்கப்பட்டது.

ஆறு HOPE கூட்டங்களில் மொத்தம் 2,722 விண்ணப்பங்கள் (வகை ஏ, பி மற்றும் சி) அங்கீகரிக்கப்பட்டதாக சுந்தராஜூ கூறினார். இதில் ஏ வகை
802 விண்ணப்பங்கள், 571 (பிரிவு பி) மற்றும் 1,349 (வகை சி) விண்ணப்பங்கள் ஆகும்.

“தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை வழங்க HOPE மாதந்தோறும் சந்திப்புக் கூட்டம் நடத்தும்,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி நிலவரப்படி, பினாங்கு அரசாங்கம் மொத்தம் 47 திட்டங்களுக்கு (பராமரிப்புப் பணிகளுக்காக) பினாங்கு அதிகபட்ச 80% வீட்டுவசதி பராமரிப்பு நிதியம் (TPM80PP) கீழ் தகுதியான 47 அடுக்குமாடி வீடமைப்புப் பராமரிப்புத் திட்டங்களுக்கு ரிம9,206,448.50 ஒதுக்கீடு வழங்கியுள்ளது என்று சுந்தராஜூ கூறினார்.

“பினாங்கு வீட்டுவசதி வாரியம் இந்த ஆண்டு ஏப்ரல்,1 முதல் TPM80PP திட்டத்திற்கான விண்ணப்பங்களை டிஜிட்டல் மயமாக்க ஒரு முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது.

“தற்போது, விண்ணப்பதாரர்கள் வாரியத்தின் அதிகாரப்பூர்வ அகப்பக்கம் வாயிலாக பினாங்கு அதிகபட்ச 80% வீட்டுவசதி பராமரிப்பு நிதியத்தில்(TPM80PP) நிதி ஒதுக்கீடு பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல்,3 நிலவரப்படி, TPM80PP திட்டத்திற்கு 93 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இத்திட்டங்கள் செயல்படுத்த மொத்தம் ரிம35 மில்லியன் நிதி மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

TPM80PP முன்முயற்சியின் கீழ், மாநில அரசு 2013 முதல் இந்த ஆண்டு ஏப்ரல்,3 வரை மொத்தம் ரிம78.8 மில்லியனை ஒதுக்கியுள்ளது என்பதையும் சுந்தராஜூ எடுத்துரைத்தார்.

“இதில் 845 பராமரிப்புத் திட்டங்கள் அடங்கும். மேலும், 450 திட்டங்கள் மின்தூக்கி மேம்படுத்துதல் அல்லது மாற்றுதல், தண்ணீர் தொட்டிகளை மாற்றுதல் அல்லது பழுதுபார்த்தல் ஆகியவை 290 திட்டங்கள் இடம்பெற்றது

“மேலும், கூரைகளை மேம்படுத்துதல் அல்லது மாற்றுதல், சாயம் அடித்தல், சாலைகள் அமைத்தல் மற்றும் பல்வேறு பராமரிப்புப் பணிகள் ஆகியவை அடங்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.

பினாங்கு வீட்டுவசதி வாரியத்தின் மேற்பார்வையின் கீழ் 12 வீட்டுவசதி பராமரிப்புத் திட்டத்திற்கு (PPP) ரிம3,780,000 ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சு (KPKT) மூலம் ஒப்புதல் அளித்துள்ளது. அதேவேளையில், செபராங் பிறை மாநகர் (MBSP) மேற்பார்வையின் கீழ் மூன்று பொது வீடமைப்புத் திட்டங்களுக்கு ரிம1,201,800 நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என சுந்தராஜூ அறிவித்தார்.

“இதனிடையே, மத்திய அரசு
பொது மற்றும் தனியார் வீடுகளில் வசிப்பவர்களுக்கு பயனளிக்கும் 51 திட்டங்கள் செயல்படுத்த மொத்தம் ரிம21,175,800 நிதி ஒதுக்கீடு அளித்துள்ளது.

“இது சம்பந்தமாக, அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கு வசதியான மற்றும் தரமான வாழ்க்கைச் சூழலை வழங்குவதற்கான வீடமைப்புப் பராமரிப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ள மத்திய அரசாங்கத்தின் தலைமைத்துவத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று சுந்தராஜூ குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் கூட்டத்தில் பினாங்கு வீட்டுவசதி வாரிய பொது மேலாளர் ஐனுல் ஃபாதிலா சம்சுதி, தலைமை வணிக அதிகாரி ஃபகுராசி இப்னு உமார் மற்றும் தலைமை சட்ட & அமலாக்க அதிகாரி நட்ஸிஃபா அப்துல் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.