போக்குவரத்து பெருந்திட்ட விளக்கக்கூட்டம்

பினாங்கு மாநில தெற்கு மீனவர் சங்கத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் போக்குவரத்து பெருந்திட்டம் குறித்த விளக்கக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். 9-வது முறையாக நடைபெறும் இந்த விளக்கக்கூட்டத்தைப் போக்குவரத்து பெருந்திட்ட எஸ்.ஆர்.எஸ் கொண்சோர்த்தியம் பங்குதாரருடன் மாநில அரசும் இணைந்து தலைமை தாங்கியது.

ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் மீனவர்களுக்கு விளக்கமளித்தார்.
ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் மீனவர்களுக்கு விளக்கமளித்தார்.

மாநில அரசு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பல தரப்பினருடனான பல விளக்கமளிப்புக் கூட்டங்கள் நடத்தியதாக நிகழ்வில் கலந்து கொண்ட மாநில முதல்வர் மேதகு லிம் குவான் தெரிவித்தார். இக்கூட்டத்தின் மூலம் மாநில அரசு மற்றும் எஸ்.ஆர்.எஸ் கொண்சோர்த்தியம் நிறுவனம் இத்திட்டத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எழும் பிரச்சனைக் குறித்து ஆராயப்படும் என்றார். போக்குவரத்து பெருந்திட்டம் குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துகளும் கவனத்தில் கொண்டு சிறந்த மற்றும் முழுமையான தீர்வுக்காணப்படும் என்றார்.

இந்நிகழ்வில் உள்ளூர் அரசு, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ், விவசாயம், விவசாயம் சார்ந்த தொழிற்துறை மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் அஃபிப் பஹாருடின், ஆட்சிக்குழு உறுப்பினர்களான டத்தோ அப்துல் மாலிக் அப்துல் காசிம், லிம் ஹொக் செங், பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் தி சின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);