மறுசுழற்சி திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் வாரீர்!

Admin

sekolah hijauமாநில அரசாங்கம் தினமும் 1,700 டான் குப்பைக் கூளங்களைச் சேகரித்து அகற்றுவதாக உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் அண்மையில் நடைப்பெற்ற பெருநிலப்பகுதி அளவிலான பசுமைப் பள்ளி விருது போட்டி (Program Anugerah Sekolah Hijau) அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்க சிறப்பு வருகையளித்திருந்த போது அறிவித்தார்.
பினாங்குவாழ் மக்களின் நலன் கருதி மாநில அரசு சுத்தம், சுகாதாரத்தோடுக் கூடிய மாசற்ற சுற்றுச்சூழலை உருவாக்குவதில் முனைப்புக் காட்டி வருவது நாம் அறிந்த ஒன்றே. இதனை மேலும் மெருகூட்டும் வகையில் மாநில அரசு ஆண்டுதோறும் தவறாது மறுசுழற்சிப் பழக்கத்தை இளைய சமுதாயத்தினரிடையே நடைமுறைப்படுத்தும் முயற்சியில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறது.
இந்த முயற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றும் நோக்கத்தில் பினாங்கு மாநில பள்ளி ரீதியிலான மறுசுழற்சியின் அவசியம் மற்றும் பயனையும் எடுத்துரைக்கும் வகையில் இந்த போட்டி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டியானது நான்கு கூறுகளின் அடிப்படையில் மதிப்பிடுவதாக இப்போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர். அவை முறையே, மறுசுழற்சி & மறுபயன்பாடு (Recycle & Reuse), புதிய கண்டுபிடிப்பு & படைப்பாற்றல்; சுத்தம் &பசுமை (Greening) மற்றும் சமூக ஈடுபாடு போன்ற அடிப்படை கூறுகளை மையமாக கொண்டதாகும்.
மேலும் மாணவர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் பொருட்டு மறுசுழற்சிப் போட்டி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப்போட்டியில் வெற்றி வாகைச்சூடும் பள்ளிப் பிரதிநிதிகளுக்குக் கோப்பை, நற்சான்றிதழ் மற்றும் ரொக்கம் பெறுவதோடு மட்டுமல்லாது இடைநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி பிரிவில் பங்குபெற்று முதல் ஆறு நிலைகளில் இடம் பெறும் பள்ளிக்கூடங்களுக்கு உபயோகப்படுத்தப்பட்ட கணினிகளும் வழங்கப்பட உள்ளது.
எனவே பினாங்கு பெருநிலப்பகுதி மாணவர்கள் இவ்வாய்ப்பினை நல்முறையில் பயன்படுத்தி ரிம10,000 பெருமானமுள்ள தொகையை வெல்ல ஆயுத்தமாவதோடுச் சுற்றுச்சூழல் பராமரிப்பிலும் தவறாது தம் பங்கையாற்ற வேண்டும்.
இப்போட்டி குறித்த தகவல்கள் அறிய www.mbpp.gov.my என்னும் இணைய தளத்தை வலம் வரலாம்.