மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மெதுவோட்டப் போட்டிக்கு ரிம 2000 மானியம் வழங்கப்பட்டது

பினாங்கு மாநிலத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் பள்ளியாக மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி திகழ்வது குறிப்பிடத்தக்கதாகும். இப்பள்ளிப் போட்டி விளையாட்டிற்கும் முக்கியதுவம் வழங்குவது சாலச்சிறந்தது.  இப்பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். அண்மையில் இப்பள்ளியில் மாணவர்களுக்கான மெதுவோட்டப் போட்டியும் பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டியும் நடைபெற்றன. இப்போட்டிகள் பள்ளி வளாகத்தில் மிக சிறப்பாக நடந்தேறியது என்றார் பள்ளியின் தலைமையாசிரியர் நா.விஜயகுமார்.

இந்த ஆண்டு பள்ளியின் ஆண்டு விளையாட்டு போட்டி ஜுலை மாதத்தில் கப்பால பத்தாஸ் விளையாட்டு அரங்கில் நடைப்பெறவிருப்பதாகவும் மேலும் அவர் அறிவித்தார். இப்போட்டிக்கு சிறப்பு விருந்தினராக பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குறிய லிம் ஹொங் செங் கலந்து  சிறப்பித்தார்.

மெதுவோட்டப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள்
மெதுவோட்டப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மதிப்பிற்குறிய லிம் ஹொங் செங் மெதுவோட்டப் போட்டியை துவக்கி வைத்து உரையாற்றிய பின்பு ரி.ம 2000-யை நன்கொடையாக வழங்கினார். தனது உரையில் மாணவர்கள் விளையாட்டு துறையில் ஆர்வம் கொள்வதன் வாயிலாகச் சுறுசுறுப்புடனும் ஆரோக்கியத்துடனும் வாழலாம் எனக் கூறுனார். அதோடு, மாணவர்கள் கல்வியிலும் சிறந்து விளங்க முடியும் என்றும் தமது உரையில் வலியுறுத்தினார். இந்நிகழ்வு பெற்றோர், ஆசிரியர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் ஆ.சரவணன் அவர்தம் குழுவினரின் ஒத்துழைப்போடு நடைபெற்றது. இந்நிகழ்வில், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கானக் கயிறு இழுத்தல், பந்து எறிதல் போன்ற போட்டிகளும் நடைபெற்றன.