மாசி மகத் தெப்ப திருவிழாவின் போது சுற்றுச்சூழகுக்கு உகந்த விளக்குகளை ஏற்றுவோம் – தர்மன்

Admin
img 1349 1024x575

தெலுக் பஹாங் – வருகின்ற பிப்ரவரி,24-ஆம் நாள் நடைபெறும் ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் ஆலய மாசி மகத் தெப்ப திருவிழாவின் போது எந்தவிதமான செயற்கை நுரை அல்லது நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம்.

“மாநில அரசாங்கத்தின் பசுமை கொள்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த ஆண்டு இரசாயனக் கலப்பு கொண்ட நெழிகி அல்லது போலிஸ்திரின் பயன்படுத்தி விளக்குகளை கடலில் விட வேண்டாம். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுயடையாமல் பாதுகாக்கப்படுவதோடு கடல்வாழ் உயிரினங்களையும் காக்க முடியும்,” என பினாங்கு மாநில இந்து சங்கத் தலைவர் விவேக நாயகன் தர்மன் தெரிவித்தார்.
img 1366 1024x575
பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஶ்ரீ சுந்தராஜு, பினாங்கு பயனீட்டாளர் சங்கம், பினாங்கு மாநில மலேசிய இந்து சங்கம் மற்றும் தெலுக் பஹாங், ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் ஆலயத்தின் நிர்வாகம் ஒருங்கிணைப்பில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது நமது கடமை என மேலும் வலியுறுத்தினார்.

இத்திருவிழாவின் போது மாலையில் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப ஊர்வலம் தொடங்கும் போது சிங்கமுக காளியம்மனின் திருவருளைப் பெறும் பொருட்டு பக்தர்கள் வேண்டுதல்கள் நிறைவேற மனமுருகி வேண்டி மிதவை விளக்குகளைக் கடலில் விடுவது வழக்கமாகும்.
img 1394 1150x2048
சிங்கமுக காளியம்மன் கடலில் பயணிக்கும் அழகிய தெப்பத் தேருடன் பக்தர்கள் பல வடிவங்களில் செய்யப்பட்ட தெப்பத் தீப விளக்குகளையும் இத்திருவிழாவின் போது கடலில் விடுவது இவ்விழாவின் கூடுதல் சிறப்பு அம்சமாகும்.

இந்த அலங்கரிக்கப்பட்ட விளக்குகள் பொதுவாக ஸ்டைரோஃபோம் மற்றும் பாலிஸ்டிரீன் என்ற நெகிழி பொருட்களில் தயாரிக்கப்பட்டு கடலில் மிதக்க விடப்படுகிறது.
மேலும், இந்த தட்டுக்கள் பாரம் இல்லாததால் தண்ணீரில் எளிதில் மிதக்கின்றன.

கடந்த காலங்களில், ஊர்வலத்திற்கு மறுநாள் ஆயிரக்கணக்கான செயற்கை நுரைப்பங்கள், நெகிழி தட்டுக்கள் கடலில் மிதப்பதைக் காண முடிந்தது. நுரைப்பம் மற்றும் நெகிழி பொருட்கள் கடல் சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் முக்கிய கடல் மாசுபாடு ஆகும். கடல்வாழ் உயிரினங்களால் உணவாக தவறாக உட்கொள்ளப்பட்டு, தீங்கு விளைவிக்கும் அல்லது கொல்லப்படுகின்றன என பினாங்கு பயனீட்டாளர் சங்க கல்வி அதிகாரி என்.வி. சுப்பாராவ் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

கடல் மாசுபாடு மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தடுக்க, பக்தர்கள் விளக்குகளை பாலிஸ்டிரீன் அல்லது நெகிழி அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றன.

சுமார் இரண்டு முதல் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு, வாழை மரத்தின் தண்டுகளின் அடுக்குகளில் இந்த விளக்குகள் பொருத்தப்பட்டன, இது சிறந்த தேர்வாகும், ஏனெனில் அது நன்றாக மிதப்பது மட்டுமல்லாமல் கடலில் மக்கும் தன்மையையும் பெறுகிறது.

கோயில் நிர்வாகம் கடந்த ஆண்டுகளில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மாற்று வழிகளை ஊக்குவித்து வரும் நிலையில், இந்த ஆண்டும் கோயில் நிர்வாகம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது.

எனவே பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தட்டுக்கள், வாழை மரத்தின் தண்டுகள் போன்றவற்றில் விளக்குகளை மிதக்க வைக்க பக்தர்களை கேட்டுக்கொள்கிறோம்.

இத்திருவிழாவானது இறைவனுக்கும், இயற்கை அன்னைக்கும், கடலுக்கும் நன்றி செலுத்தும் வகையில் அமைந்திருப்பதால், இவ்விழாவை மேலும் அர்த்தமுள்ளதாக்க சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.