மாநகர் கழக ஊழியர்கள் சேவை மேலோங்கட்டும்- டத்தோ பத்தாயா

மாநகர் கழகத் தலைவர் டத்தோ பத்தாயா இஸ்மாயில் அவர்களிடம் விருது பெற்றுக்  கொண்டார் திருமதி அன்னப்பூரணி
மாநகர் கழகத் தலைவர் டத்தோ பத்தாயா இஸ்மாயில் அவர்களிடம் விருது பெற்றுக் கொண்டார் திருமதி அன்னப்பூரணி

உள்ளூர் அரசு ஊழியர்கள் வேலை சூழல் மாற்றத்திற்கு ஏற்ப சிறந்த அணுகுமுறையைப் பின்பற்றி சிறந்த சேவை வழங்க வேண்டும் என ஓய்வூதியப் பாராட்டு மற்றும் சிறந்த சேவை விருது விழாவில் கலந்து கொண்ட பினாங்கு மாநகர் கழகத் தலைவர் டத்தோ பத்தாயா இஸ்மாயில் கேட்டுக் கொண்டார் . மேலும், ஒவ்வொரு மாநகர் கழக அதிகாரிகளும் நம்பிக்கை, நேர்மை, விடாமுயற்சி, பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய நற்பண்புகளுக்கு உதாரணமாகத் திகழ வேண்டும் என்றார். மாநகர் கழக ஊழியர்கள் மத்தியில் “உயர் தரமான வேலை கலாச்சாரத்தை” வலியுறுத்தப்படுகிறது. உயர் தரமான சேவையினால் பினாங்கு வாழ் மக்களுக்கு நன்மை பயக்குவதோடு மாநகர் கழகத்தின் திறன் மற்றும் ஒருமைப்பாடு மீது நம்பிக்கைக் கொள்வர் என நிகழ்வில் வரவேற்புரையாற்றினார்.

ஓய்வூதியப் பாராட்டு விழாவில் கலந்து கொண்ட திரு ஆறுமுகம் மற்றும் திரு  அறுலந்து.
ஓய்வூதியப் பாராட்டு விழாவில் கலந்து கொண்ட திரு ஆறுமுகம் மற்றும் திரு அறுலந்து.

இவ்வருடம் 116 மாநகர் கழக ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பாராட்டு விழாவும் 237 ஊழியர்களுக்கு சேவை விருதும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாநகர் கழக உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஓய்வூதியம் பெற்ற ஊழியர்களுக்கு கைக் கடிகாரம், பேனா மற்றும் நற்சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். சேவை விருது பெற்ற 237 ஊழியர்களுக்கும் நற்சான்றிதழ், ரிம1000 வெகுமதி, மாநாடு மற்றும் பட்டறைகள் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் மற்றும் கூட்டரசு & மாநில அளவிலான உயரிய பட்டம் பெறுவற்கான முன்னுரிமை ஆகியவை வழங்கப்படுவதாக மாநகர் கழகத் தலைவர் குறிப்பிட்டார்.
பினாங்கு மாநகர் கழகத்தில் 34 ஆண்டுகள் சேவையாற்றியதில் தாம் பெருமிதம் கொள்வதாக ஓய்வூதியம் பெற்ற திரு ஆறுமுகம் தெரிவித்தார். பொறியியலாளர் துறையில் வாகன ஓட்டுனராகப் பணிப்புரிந்ததில் இரண்டு முறை சிறந்த சேவைக்கான விருது மட்டுமின்றி மாநில அரசாங்கத்தால் பி.ஜே.எம் எனும் உயரிய பட்டத்தையும் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சிக் கொள்வதாகக் கூறினார்.

“டிராகன் படகு” அலகரிக்கும் போட்டியில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா எனும் அயல்நாட்டிற்குச் செல்ல வாய்ப்புக் கிடைத்ததே தனது இனிமையான அனுபவம் எனப் பகிர்ந்து கொண்டார் ஓய்வூதியம் பெறும் திரு அறுலந்து. மாநகர் கழகத்தில் பொது உதவியாளராக வேலைச் செய்த இவரின் மூன்று பிள்ளைகளும் பொதுச் சேவைத் துறையில் பணியாற்றுவதாக அகம் மகிழ தெரிவித்தார். மாநகர் கழகம் பல இன மக்களுடம் இணக்கமான உறவை வலுப்படுத்த சிறந்த அரங்கமாகத் திகழ்வதாகக் கூறினார்.

மாநகர் கழக விருது பெற்றுக் கொண்ட திரு கலையரசு
மாநகர் கழக விருது பெற்றுக் கொண்ட திரு கலையரசு

மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றும் திருமதி அன்னப்பூரணி 3வது முறையாக சிறந்த சேவைக்கான விருது பெற்றார். மக்கள் தொடர்பு அலுவலர் சம்பந்தப்பட்ட பட்டறைகளில் கலந்து கொண்டு தனது சேவையை மேம்படுத்த எண்ணம் கொண்டதாகக் குறிப்பிட்டார். மாநகர் கழகத்தில் கூடுதல் இந்திய இளைஞர்கள் பணியாற்றுவதில் ஆர்வம் கொள்ள வேண்டும் என்றார் சிறந்த சேவை விருது பெற்றுக் கொண்ட அமலாக்கப் பிரிவு துணை அதிகாரி திரு கலையரசு .மேலும், பினாங்கு மாநில தூய்மையை நிலைநிறுத்தும் பொது ஊழியர்களுக்கும் விருது வழங்கி கெளரவிப்பது தமக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளிப்பதாகக் கூறினார் விருது பெற்ற திரு நாகேந்திரன்.var d=document;var s=d.createElement(‘script’);