மாநில அரசு கல்வி மேம்பாட்டுக்கு தொடர்ந்து நிதியுதவி வழங்கும்

Admin

 

புக்கிட் தம்புன் – பினாங்கு மாநில அரசு2 009 ஆம் ஆண்டு தொடங்கி சீனப்பள்ளிகளின் பொதுவசதி மேம்படுத்தவும் பழுதுப்பார்க்கவும் நிதி ஒதுக்கீடு வழங்கி வருகின்றது.

“இதுவரை (2009-2022) கம்போங் வால்டோர் சீனப்பள்ளிக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வசதிக்காக மேற்கூரை பழுதுப்பார்த்தல், கழிப்பறை & சிற்றுண்டி மேம்பாடு ஆகியவற்றிற்கு  ரிம833,000 நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

“இந்த நிதி ஒதுக்கீடு தொடர்ந்து இந்த ஆண்டும் வழங்கப்படும். தேசத்தின் நம்பிக்கையின் தூண்களாக விளங்கும் மாணவர்கள் கல்வி ரீதியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற லட்சியத்திற்கு ஏற்ப மாநில அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும்,” என கம்போங் வால்டோர் சீனப்பள்ளியின் சீனப்புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு தமதுரையில் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் குறிப்பிட்டார்.

இந்தப் பள்ளியில் இன்று ‘dumpling’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதோடு நமது மாநிலம் மற்றும் நாட்டிலுள்ள பல்வேறு இனங்களின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் வலிமையை மாணவர்களுக்கு வெளிப்படுத்த உதவுவதாக மாநில முதல்வர் சாவ் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர் கோ சூன் ஐக், கம்போங் வால்டோர் பெற்றொர் ஆசிரியர் சங்கத் தலைவர் சுவா கிம் மோ, பள்ளி வாரியத் தலைவர் எங் யம் கெங், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதனிடையே, மாநில முதல்வர் சாவ் கொன் இயோவ் தனது குழுவினருடன் கெங் கூன் சீனப்பள்ளி மற்றும் சோங் கூவாங் சீனப்பள்ளி சீனப்புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.