மாநில அரசு மேக விதைப்பை தனது சொந்த செலவில் செயல்படுத்த உறுதிப்பூண்டுள்ளது

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மற்றும் கெடாவில் மேக விதைப்பை விரைவில் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த, 5 மார்ச் 2020 மற்றும் 10 ஏப்ரல் 2020 ஆகிய தேதிகளில் இரண்டு கடிதங்களை மலேசிய வானிலை ஆய்வுத் துறை (எம்.இ.டி மலேசியா), சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சிற்கு இதன் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளதை மாநில முதல்வர் குறிப்பிட்டார்.

14 ஏப்ரல் 2020 அன்று மலேசிய வானிலை ஆய்வுத் துறையிடம் இருந்து மாநில அரசுக்கு கிடைக்கப்பெற்ற பதில் கடிதத்தில் அத்துறை மேக விதைப்பை அமல்படுத்த எப்பொழுதும் தயார் நிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

பொதுவாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை அணைகளுக்கான மேக விதப்பை செயல்படுத்த, உலர்ந்த முறையை பயன்படுத்தும். எனவே, இந்த நடவடிக்கைக்கு விமான வாடகை மற்றும் “ஹைக்ரோஸ்கோபிக்” எரிப்புக்கான இயக்க செலவுகளை மாநில அரசு ஏற்க வேண்டும் என்றும், எம்.இ.தி தொழில்நுட்ப நிபுணத்துவத்தின் அடிப்படையிலான உதவிகள் மட்டுமே வழங்குன் என குறிப்பிடப்பட்டது.

எனவே,

தினசரி

பினாங்கு மற்றும் கெடாவில் வாழும் 3.95 மில்லியன் மக்களின் அன்றாட தேவைகளுக்கும், முறையான சுகாதாரத்தை கடைப்பிடிக்க (கோவிட்-19 பரவலை எதிர்க்க) நிலையான நீர் வழங்கல் தேவைப்படும். எனவே, பினாங்கு மாநில அரசு இந்த மேக விதைப்பை தனது சொந்த செலவில் செயல்படுத்த உறுதிபூண்டுள்ளதை மாநில முதல்வர் உறுதிப்படுத்தினார்.

இம்மாநில பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பின் நலனுக்காக சம்பந்தப்பட்ட தரப்பினரால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

இதுவரை பினாங்கு மாநில அரசு 2019-ஆம் ஆண்டு தொடங்கி மூன்று முறை மேக விதப்பை அமல்படுத்தியுள்ளது (28/4/19 – 4/5/2019, 19/9/2019 & 18/1/2020 – 21/1/2020). ஒரு முறை உலர்ந்த மேக விதப்பை அமல்படுத்த மாநில அரசு ரிம27,000 செலவிடுவது குறிப்பிடத்தக்கது.