மின் தூக்கி மறுசீரமைக்கப்படும் – சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன்

ஶ்ரீ பாகான் அடுக்குமாடி பிரச்சனைகளை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன்
ஶ்ரீ பாகான் அடுக்குமாடி பிரச்சனைகளை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன்

பாகான் டாலாம் தொகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ பாகான் என்ற 13 மாடிகளைக்கொண்ட அடுக்குமாடி வீட்டு மின் தூக்கி கடந்த 3 வாரங்களாகப் பழுதாகியிருப்பதால், கர்ப்பிணி பெண்கள் உட்பட வயதானவர்கள் யாவரும் பெரும் சிரமத்துக்குள்ளாகி இருப்பதாகவும், அதனால் 3 கர்பிணிப் பெண்கள் இந்த இடத்தை விட்டே வெளியேறி விட்டார்கள் என்றும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.தனசேகரனிடம் குடியிருப்பாளர்கள் புகார் செய்துள்ளனர்.

மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜே.கே.பி எனும் குடியிருப்பு பாதுகாப்பு மேம்பாட்டு நிர்வாகம் அம்னோ தலைவர்களைக் கொண்டு இயங்கி வரும் பட்சத்தில், முறையான பாதுகாப்பு, சுகாதார, மேம்பாட்டுப் பணிகள் கவனிக்கப்படாமல் இருப்பதாக அங்கு குடியிருந்து வரும் மக்கள் தங்களின் மன வேதனையை வெளிப்படுத்தினர். 13 மாடிக்கொண்ட அவ்வடுக்குமாடியில் 426 வீடுகளில் ஏறக்குறைய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள், 4 மின் தூக்கிகளில் 3 முழுமையாக பழுதாகி பயன்படுத்த முடியாத சூழ்நிலையிலும், மேலும் ஒரு மின் தூக்கி அடிக்கடி பழுதாகி விடுவதால் மேல் மாடியில் குடியிருக்கும் வயதானவர்கள், பள்ளிப் பிள்ளைகள், கர்ப்பிணி பெண்கள் படிகளில் நடந்து மேல் மாடிக்கு செல்லும் அவலத்தை எதிர்நோக்குகிறார்கள் என்று அடுக்குமாடி வீடு கட்டப்பட்ட காலம் முதல் குடியிருந்து வரும் 79 வயதான முகம்மது நோர் தன் சிரமத்தை குறிப்பிடார். இங்குக் குப்பைக் கூளங்கள், குழாயில் தண்ணீர் வராமல் நின்று விடும் பிரச்சனைகளால் , மாணவர்கள் உட்பட மக்கள் குளிக்கக்கூட வசதியில்லாமல் தவிக்கிறார்கள் என்று திருமதி சாரதா பத்துமலை கவலை தெரிவித்தார்.

ஶ்ரீ பாகான் அடுக்குமாடி குடியிருப்பு
ஶ்ரீ பாகான் அடுக்குமாடி குடியிருப்பு

இதனிடையே 13 மாடியைக்கொண்ட அடுக்குமாடி மின் தூக்கி பகுதியையும், சுற்று வட்டாரத்தையும் பார்வையிட்ட பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன், கூடிய விரைவில் கட்சி, இனம் , சமயம், கொள்கை வேறுபாடின்றி மக்களுக்கு சேவை செய்வேன் என உறுதியளித்தார். ஶ்ரீ பாகான் குடியிருப்பில் உள்ள நிர்வாகத்தை தாண்டி நாம் இங்கு தலையிடக் கூடாது என்ற பொதுவான விதி இருப்பதால், இங்குள்ள நிர்வாகம் தயங்காமல் தன்னிடம் ஒரு கடிதத்தை வழங்கி உங்கள் பிரச்சனையைப் பட்டியலிட்டால், தக்க நடவடிக்கை எடுப்பேன் எனக் குறிப்பிட்டார். இந்த குடியிருப்பில் காணப்படும் மின் தூக்கி, குப்பை பிரச்சனை மற்றும் தண்ணீர் பிரச்சனை தீர்க்கக் கூடுதல் நிதியுதவி தேவைப்பட்டாலும் மாநில முதல்வரின் உதவியுடன் அனைத்துப் பிரச்சனைகளையும் உடனடியாகத் தீர்த்து வைக்க முயற்சிப்பேன் என்றார். இங்குள்ள குடியிருப்பு மின் தூக்கி பிரச்சனை முறையாக கையாளப்பட்டால் பொது மக்கள் நிம்மதியாக வாழலாம் என மேலும் தெரிவித்தார்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);