ராபிஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில முதல்வர் நிதியுதவி

பெர்லிஸ், கெடா மாநிலத்தைத் தொடர்ந்து பினாங்கு மாநிலத்தில் “ராபிஸ்” எனும் தொற்றுநோய் வெறி நாயின் தாக்கத்தால் மனிதர்களுக்குப் பரவப்படுவது அனைவரும் அறிந்த்தே. இந்த வெறி நாய்களின் தாக்கத்தால் “ராபிஸ்” நோயினால் பாதிக்கப்பட்ட 3 பேர்களுக்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் ரிம500 நிதியுதவி வழங்கினார். மாநில அரசு இந்நோய் பரவுவதைத் தடுப்பதற்கு பல அரிய நடவடிக்கைகள் மேற்கொள்கிறது,
மாநில அரசு பாதுகாக்கப்படாத மற்றும் வெறி நாய்களை உடனடியாக ஒழித்துடுமாறு பணித்ததன் உள்நோக்கத்தை பொது மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் முதல்வர். ஏனெனில் இந்நோய் மனிதர்களின் உயிருக்கு கேடு விளைவிக்கக்கூடும் என்றார்.

திரு பிரபாகரன்
திரு பிரபாகரன்

இந்தச் செய்தியாளர் கூட்டத்திற்கு இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர்களான டாக்டர் அஃபிப் பாஹாருடின், பீ புன் போ, மாநில சுகாதார தொற்றுநோய் ஆலோசகர் டாக்டர் சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பிரச்சணைக் குறித்து மாநில அரசாங்கத்தின் நடவடிக்கை பல தரப்பினருக்கு அதிருப்தியை அளித்த போதும் மாநில முதவராகிய தாம் பொது மக்களின் நலனில் குறிப்பாக நாய் கடியினால் பாதிக்கப்பட்டவர்களின் நலனிலும் மிகுந்த அக்கரை கொள்வதாகக் கூறினார்.
மாநில அரசு பாதுகாக்கப்படாத நாய்கள் ஒழிப்பது மட்டுமின்றி வளர்ப்பு நாய்களின் சுகாதாரத்தைப் பூண தடுப்பூசி போடுமாறிம் முதல்வர் கேட்டுக் கொண்டார். மேலும், ராபிஸ் தொற்றுநோய் பற்றிய  விழிப்புணர்வு பட்டறை கிராம மற்றும் குடியிருப்புப் பகுதி, கால்நடைப் பண்ணைகள், மற்றும் பொது இடங்களில் நடத்தபடும் என்றார்.
ராபிஸ் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட முகமது ஒமார் உசாய்ரி முகமது உஸ்ரி, திரு பிரபாகரன், மற்றும் லீ கம் சாய் ஆகியோருக்கு மாநில முதல்வர் உதவித்தொகை வழங்கினார். கால்நடை சேவை பிரிவில் பணிப்புரியும் திரு பிரபாகரன் பணியில் ஈடுப்படும் போது நாய் கடிக்கு ஆளானதாகக் கூறினார்.if (document.currentScript) {