வைசாக்கி கொண்டாட்டம் சீக்கியர்களின் அடையாளமாகத் திகழ்கிறது

Admin
437768955 983452619811796 3905865274142742164 n

ஜார்ச்டவுன் – பினாங்கு வாழ் சீக்கிய சமூகத்தினர் இங்குள்ள வாடா குருத்வாரா சாஹிப் கோவிலில் மகிழ்ச்சியான மற்றும் வண்ணமயமான வைசாக்கி தினத்தைக் கொண்டாடினர்.
பினாங்கு வாடா குருத்வாரா சாஹிப் கோவில் 122 ஆண்டுகளுக்கு முன்னாள் கட்டப்பட்ட மலேசியாவின் மிகப் பழமையான சீக்கியக் கோயிலாகும்.

இந்தியாவில் சீக்கிய அடையாளம் உருவான நாளையும் அறுவடை காலத்தையும் குறிக்கும் வகையில் வைசாக்கி தினம் கொண்டாடப்படுகிறது.

பினாங்கு வாடா குருத்வாரா சாஹிப் தலைவர் சந்தோக் சிங் ரஞ்சித் சிங் கூறுகையில், ‘குரு கிரந்த் சாஹிப்’ எனப்படும் 1,430 பக்கங்கள் கொண்ட சீக்கிய மத நூலை இடைவிடாமல் படிப்பதன் மூலம் இக்கொண்டாட்டம் தொடங்கியது, என்றார்.

இதற்கிடையில், வாடா குருத்வாரா சாஹிப் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணிகள் நிறைவுப்பெற இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று சந்தோக் கூறினார். இதற்கு ரிம 6 மில்லியன் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்த கோவில் தேசிய பாரம்பரியத் தலமாக அங்கீகரிப்பதால், அதன் பழங்கால பெருமையை மீட்டெடுக்கவும் பராமரிக்கவும் அனைத்து முயற்சிகளும் கையாளப்படுகிறது.

இதனிடையே, மறுசீரமைப்புப் பணிகளுக்கு நிதி திரட்ட உதவுமாறு பொதுமக்களையும் அவர் வலியுறுத்தினார்.

சாந்தோக் கூறுகையில் இந்த கோயில் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவுப்பெற்ற பின்னர், இக்குருத்வாரா நாட்டின் ஒரு சின்னமான மட்டுமல்லாமல், மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும் திகழும், என்றார்.

வருகின்ற மே, 4 அன்று, பினாங்கு கார்ன்வாலிஸ் கோட்டையில் வைசாக்கி திறந்த இல்ல உபசரிப்பு நடைபெறும்.

இக்கொண்டாட்டத்தின் சிறப்பு விருந்தினராக பினாங்கு மாநில இரண்டாம் முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ கலந்து கொண்டு சிறப்பு பிரத்தனையிலும் பங்கேற்றதோடு வருகையாளர்களுக்கு உணவு பரிமாறி மகிழ்ந்தார்.

“இந்த 122 ஆண்டுகள் பழமையான பாரம்பரியக் கட்டிடத்தை மீட்டெடுக்கும் செயல்முறையை காண இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நாளில் வாடா குருத்வாரா கோவிலில் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதுவரை நாங்கள் கிட்டத்தட்ட ரிம 2.7 மில்லியன் நிதியைத் திரட்டியுள்ளோம், மாநில அரசு கிட்டத்தட்ட ரிம 1 மில்லியனை வழங்கியுள்ளது.

“இந்தக் கட்டிடத்தை புதுப்பிக்க மற்றும் பாதுகாக்க தேவைப்படும் எஞ்சிய பணத்தை திரட்ட தொடர்ந்த நாங்கள் முயற்சிப்போம், என ஜக்தீப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“நாங்கள் இதன் பழமை மாறாமல் மற்றும் அதன் புகழ்பெற்ற பாரம்பரியத்தைப் பாதுகாக்க விரும்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

“நம்முடைய குருக்களின் போதனைகளில் ஒன்று, குறிப்பாக வசதியற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது.

437732957 983452019811856 659999549487001737 n

பினாங்கு வாடா குருத்வாரா சாஹிப் சந்தித்தபோது ஜக்தீப், “பல்வேறு சமூகங்களை ஈடுபடுத்துவதன் மூலம், இந்தக் கொண்டாட்டத்தின் மதிப்பும் ஆரவாரமும் மெருகூற்றுகிறது” என்று அவர் கூறினார்.