ஸ்பான் நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் உடனடி நிறுத்தம்- முதல்வர்

மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் ஸ்பான் நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தை உடனடியாக நிறுத்திமாறு பணித்தார்
மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் ஸ்பான் நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தை உடனடியாக நிறுத்திமாறு பணித்தார்

பொதுப்பணி துறை மற்றும் UEM மேம்பாட்டு நிறுவன கீழ் இயங்கும் 3 பிரிவுகளை இணைக்கும் ஸ்பான் உயர்ந்த நெடுஞ்சாலை நிர்மானிப்புப் பணி ஏற்படுத்திய சாலை நெரிசலினால் அத்திட்டம் உடனடி நிறுத்தம் கண்டது என்றார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். பாயான் பாரு, சுங்கை குளுவாங் பகுதியில் நிர்மாணிக்கப்படும் இந்த நெடுஞ்சாலையினால் கடந்த 17/8/2015 பினாங்கு மாநில பாயன் பாரு பகுதியில் கடுமையான நெரிசல் ஏற்பட்டு பொது மக்கள்அனைவரும் மனவுலைச்சலுக்கு ஆளாகினர்.

இந்த மேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொள்ள பாயன் பாரு பகுதியில் சாலைகள் அடைக்கப்பட்டது. இதனால் பினாங்கு தீவுப் பகுதியில் பொது மக்கள் பல மணி நேரத்திற்குச் சாலை நெரிசலை எதிர்நோக்கினர். பொதுப்பணி துறை மற்றும் UEM மேம்பாட்டாளர் சாலைஅடைப்பு திட்டத்தில் தோல்விக் கண்டதை முன்னிட்டு இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார் மாநில முதல்வர்.
வழக்கத்திற்கு மாறான சாலை நெரிசலை ஏற்படுத்தியதற்கு UEM மேம்பாட்டு நிறுவன சார்பில் அதன் தலைமை இயக்குநர் அமாட் பாசி அலி செய்தியாளர் கூட்டத்தில் மன்னிப்புக் கேட்டார்.

ஸ்பான் நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
ஸ்பான் நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்

UEM மேம்பாட்டு நிறுவனம் முறையான சாலை அடைப்பு திட்டத்தைக் கொண்டுவருமாறு பணிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் தெரிவித்தார்