இளம் அறிவியலாளர் திட்டம்

Admin
இளம் அறிவியலாளர் திட்டத்தில் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கலந்து சிறப்பித்தார்

அண்மையில் தாமான் சாய் லெங் பார்க் சமூக மேம்பாட்டு மற்றும் முன்னேற்ற கழகமும் பினாங்கு தேக் டோம் இணை ஏற்பாட்டில் இளம் அறிவியலாளர் திட்டம்‘ பிறை தமிழ்ப்பள்ளியில் இனிதே நடைபெற்றதுஇந்நிகழ்வில் சுமார் 104 மாணவர்கள் கலந்து கொண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டினைக் கண்டு இன்புற்றுனர்.

இளம் அறிவியலாளர் திட்டத்தில் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கலந்து சிறப்பித்தார்

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கலந்து சிறப்பித்தார்பினாங்கு மாநில அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை தமிழ்ப்பள்ளிகளில் கொண்டுவர 21-ஆம் நூற்றாண்டு கற்றல் மற்றும் கற்பித்தல் திட்டத்தை அமல்படுத்தியது என தமதுரையில் குறிப்பிட்டார்இன்றைய காலக்கட்டத்தில் தொழில்நுட்பம் சார்ந்த கற்பித்தல் திட்டம் மாணவர்கள் கல்விகேள்விகளில் சிறந்து விளங்கவும் ஆக்கப்பூர்வமான சிந்தனை ஆற்றலை மேலோங்க செய்யவும் துணைபுரியும் என பிறை சட்டமன்ற உறுப்பினருமான அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மேலும் அத்தினத்தன்று மாணவர்கள் 3D’ தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி கண் கண்ணாடி செய்ய கற்றுக்கொண்டனர். ‘இம்மாதிரியான திட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்த வேண்டும்பாட நேரம் போக மாணவர்களின் தனித்துவத்தை வெளிக்கொணர இத்திட்டம் அமையும்‘, என பேராசிரியர் குறிப்பிட்டார்வீட்டிற்கு ஒரு கணினி அவசியம் இருக்க வேண்டும் என தாமான் சாய் லெங் பார்க் சமூக மேம்பாட்டு மற்றும் முன்னேற்ற கழக உறுப்பினர் கேட்டுக் கொண்டனர்.