PH மற்றும் BN கட்சிகள் முக்கியமான தொகுதிகளின் தேர்தல் பிரச்சாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

Admin

பாகான் டாலாம் – பக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி கட்சிகள் வருகின்ற ஆகஸ்ட்,12 ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே எஞ்சிய இருக்கும் வேளையில் ‘முக்கியமான தொகுதிகளில்’ அதிக கவனம் செலுத்துமாறு வலியுறுத்தப்படுகின்றன.

பினாங்கு PH தலைவரும் பினாங்கு மாநில பராமரிப்பு அரசாங்க முதலமைச்சருமான மேதகு சாவ் கொன் இயோவ், அனைவரும் வாக்களிக்க முன் வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


“முக்கியமான தொகுதிகளில் கூடுதல் போட்டிகள் ஏற்படுவதால், இதன் விளைவாக சிறுபான்மை வெற்றி அல்லது அதேபோன்று குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில்
தோல்வியையும் தழுவக்கூடும், என்றார்.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், PH மற்றும் BN தேர்தல் பிரச்சாரங்கள் மூலம் முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

“மாநில அளவில் ஓர் ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவ 30 சட்டமன்ற இடங்களுக்கு மேல் வெற்றி பெற இணக்கம் கொள்கிறோம்,” என்று
இன்று பாகான் டாலாம், கம்போங் பெங்காலியில் நடைபெற்ற பேரூரையின் போது இவ்வாறு கூறினார்.

மேலும், பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் மற்றும் பாகான் டாலாம் சட்டமன்ற வேட்பாளர் குமரன் கிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், குமரன் இரண்டு ஆண்டுகளாக செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) கவுன்சிலராகப் பணியாற்றியதால், அவர் பாகான் டாலாம் தொகுதிக்குப் புதியவர் அல்ல, என்றார்.

“நானும் இங்குதான் பிறந்து வளர்ந்தேன். பாகான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருக்கு உதவியாளராகவும் பணியாற்றியுள்ளேன்.

“எனவே, இந்தத் தொகுதி எனக்குப் புதிதல்ல, இங்குள்ள தொகுதி மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளையும் நான் நன்கு அறிவேன்.

“பொது மக்களின் ஆதரவினால் பாகான் டாலாம் சட்டமன்ற தொகுதி பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இங்குள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று குமரன் கூறினார்.