ViTrox நிறுவனத்தின் சொந்த கல்லூரி அதிகாரப்பூர்வ திறப்பு விழா

Admin

பத்து காவான் – பார்வை-பரிசோதனை கருவி தயாரிப்பாளரான ViTrox கார்ப்பரேஷன் பெர்ஹாட் இன்று ViTrox கல்லூரி எனப்படும் அதன் சொந்த கல்வி மையத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது

இது பத்து காவான் தொழிலியல் பூங்கா (BKIP) இல் உள்ள தொழிற்சாலை இருக்கும் அதே இடத்தில் அமைந்துள்ளது.

ViTrox தலைமை நிர்வாக அதிகாரியும் அதன் தலைவருமான சூ ஜென் வெங் கூறுகையில், இக்கல்லூரியானது தொழில்துறையை மையமாகக் கொண்டு, ஊக்கமளிக்கும் கல்வியுடன் நடைமுறை கற்றல் சூழலுக்கு ஏற்ப அனுபவக் கல்வியும் வழங்கும், என்றார்.

“ViTrox கல்லூரியானது, தொழில்துறையின் கல்வி மற்றும் தொழில் அமைப்புகளை இணைக்கும் வகையில் உண்மையான அன்றாட வேலைகளுடன் தொடர்புடைய சூழலுக்கு ஏற்ப வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

“இந்த கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இடமளிக்கிறது

“பினாங்கு அரசாங்கம் அதன் பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வையுடன் எதிர்காலத்திற்கான ஒரு சிறந்த வழித்தடத்தை அமைத்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த இலக்கை ஆதரிப்பதில் ViTrox பெருமிதம் கொள்கிறது.

“மேலும், மாநிலம் மற்றும் தொழில்துறை எதிர்கொள்ளும் முக்கியமான சவால்களில் ஒன்று, திறன்மிக்க பொறியியலாளர்கள் தேவையாகும். இதற்குதான் ViTrox கல்லூரி உருவாக்கம் கண்டுள்ளது.

ViTrox கல்லூரியின் நோக்கமானது, அடுத்த தலைமுறைக்கு தொழில்நுட்ப திறன்கள் மற்றும் மனிதநேய விழுமியங்களைக் கற்பித்தல் மற்றும் அவர்கள் புத்தாக்கத் திறன் கொண்டு சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் நல்வாழ்விற்கும் பங்களிக்க வேண்டும், என்பதாகும்.

மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுக் ஆட்சிக்குழுத் தலைவர் சூன் லிப் சீ; புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர் கோ சூன் ஐக்; இன்வெஸ்ட்பினாங்கு தலைமைச் செயல் அதிகாரி டத்தோ லூ லீ லியான், மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் (MIDA) (முதலீட்டு மேம்பாடு) துணைத் தலைமைச் செயல் அதிகாரி லிம் பீ வியான் மற்றும் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சூவின் கூற்றுபடி, ViTrox கல்லூரி தற்போது மூன்று டிப்ளமோ துறைகளை வழங்குகிறது.

“அவை Mechatronics Engineering, Diploma in Electrical மற்றும் Electronic Engineering, மற்றும் Diploma in Electronic Engineering (machine vision) ஆகியவை அடங்கும்.

“இந்தத் துறைகள் அனைத்தும் மலேசிய தகுதி அங்கீகாரம் (MQA) சான்றிதழைப் பெற்றுள்ளன.

“இந்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி, முதல் பதிவில் மொத்தம் ஒன்பது மாணவர்கள் இக்கல்லூரியில் முதல் தவனைத் தொடங்கியுள்ளனர்.

“நிச்சயமாக, எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், தொழில் மேலாண்மை மற்றும் பிற துறைகள் சார்ந்த கல்வியை இணைக்கும் திட்டம் எங்களிடம் உள்ளது.

“ஆனால், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடைய திட்டத்தைத் தொடங்குவதே எங்கள் முன்னுரிமையாக இருக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.

ViTrox கார்ப்பரேஷன் பெர்ஹாட் கடந்த ஆண்டு ViTrox அறக்கட்டளைக்கு ரிம1.69 மில்லியனை வழங்கியதாகவும் சூ அறிவித்தார்.

“அத்தொகையிலிருந்து, ViTrox கல்லூரியில் தங்கள் கல்வியைத் தொடர விரும்பும் வசதிக் குறைந்த மாணவர்களுக்கு ஆதரவளிக்க ViTrox அறக்கட்டளை இந்த ஆண்டு ரிம500,000 நிதி ஒதுக்கியுள்ளது.

“இந்த முதலீடு மூலம் மாணவர்களுக்கு தரமான கல்வியைப் பெறுவதற்கும், தொழில்துறைக்குத் தேவையான திறன்களை மேம்படுத்துவதற்கும், வாய்ப்பளிக்கும்,” என்று சூ மேலும் கூறினார்.

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் ViTrox கல்லூரியை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

ViTrox கல்லூரியை பிரமாண்டமாகத் திறந்ததற்காக சாவ் இந்நிறுவனத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

“இது ஒரு புதிய தொழில்துறையை மையமாகக் கொண்ட கல்வி நிறுவனமாகும், இது அனுபவக் கல்வி கற்றல் சூழலுக்குக் கூடுதல் கவனம் செலுத்துகிறது.

முதல்வரின் கூற்றுப்படி, 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, தொழில்துறைக்கும் கல்வித்துறைக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்த ViTrox உறுதிபூண்டுள்ளது.

” ViTrox கல்லூரி திறமைகளை ஈர்ப்பதற்கும், அவர்களை திறமையான தொழிலாளர்களாக உருமாற்றுவதற்கும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று நம்பப்படுகிறது.

“இது, வட பிராந்தியத்தில் திறன்மிக்க காந்தமாக பினாங்கின் நிலையை உறுதிப்படுத்தும்.

“உள்ளூர் மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதிலும் புத்தாக்கத் திறன் கொண்ட சமூகத்தை வளர்ப்பதிலும் ViTrox கல்லூரியின் மீது நம்பிக்கை தெரிவித்தார்.

பின்தங்கிய மாணவர்களுக்கும் தரமான கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்கு தொழில்துறையின் ஆதரவு அளிக்க வேண்டும் என சாவ் கேட்டுக்கொண்டார்.

“இது அனைவருக்கும் சமமான அணுகலைச் செயல்படுத்தும், இது அவர்களின் முழு திறனை அடைய அவர்களுக்கு உதவுவதற்கு அவசியமானதாகும்.