தங்க மாணவர் திட்டம் மீண்டும் மலந்தது

Admin

கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தங்க மூத்தகுடிகள் திட்டம், தங்க மாணவர் திட்டம், தங்கக் குழந்தை திட்டம், மாற்றுத் திறனாளிகள் திட்டம் போன்ற மற்ற தங்கத் திட்டங்கள் யாவும் இத்தவணைக்கான ஆட்சியிலும் தொடரப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. பினாங்கு மக்கள் கூட்டணி அரசு தனது சிறந்த பொருளாதார நிர்வகிப்பின் பலனாக ஒவ்வோர் ஆண்டும் வரவு செலவுத் திட்டத்தில் மிகை நிதியைப் பெற்றுச் சாதனை புரிந்து வந்துள்ளது.

அவ்வகையில் இந்த ஆண்டு அரசு உயர் கல்வி நிலையங்களில் உயர் கல்வியைத் தொடர்வதற்கு வாய்ப்புப் பெற்ற  பினாங்கு வாழ் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரிம 1000 வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் 2462 மாணவர்களுக்கு ரிம 2462 000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த உதவித்தொகை வழங்கப்படுவதன் மூலம் மாணவர்கள் தங்களின் கல்வியைத் தொடங்குவதற்கு ஓர் ஊன்றுகோளாக அமையும். மக்கள் கூட்டணி அரசு இனம் பேதமின்றி அரசு உயர் கல்வி நிலையங்களில் வாய்ப்புப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வழங்கியது பாராட்டக்குறியதாகும்.

 

உதவித்தொகை பெற்ற கொண்ட மாணவர்களுடன் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய கஸ்தூரி பட்டு
உதவித்தொகை பெற்ற கொண்ட மாணவர்களுடன் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய கஸ்தூரி பட்டு

மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத் துறைத் தலைவர்கள், மற்றும் பினாங்கு செபெராங் ஜெயா தலைவர்கள் ஆகியோர் மத்திய செபெராங் பிறையில் நடைபெற்ற மாணவர் தங்கத் திட்டத்தில் கலந்து கொண்டனர்.

பினாங்கு மாநிலத்தில் ஐந்து மாவட்டங்களில் ஒவ்வொரு கட்டமாக மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டன. இத்திட்டத்தில் இளங்கலை பட்டம் மற்றும் டிப்ளோமா பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன என்பது சாலச்சிறந்தது. 2013-ஆம் ஆண்டிற்கானத் தங்க மாணவர் திட்டத்தில் தகுதியான பினாங்கின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பெறுபவர்களின் எண்ணிக்கையைக் கீழ்க்காணும் அட்டவணையில் காணலாம்.

 

 

 

மாவட்டம்

உதவித்தொகை பெறுநர்களின் எண்ணிக்கை
வடகிழக்கு மாவட்டம் 544
கிழக்கு செபெராங் பிறை மாவட்டம் 636
தென் செபெராங் பிறை மாவட்டம் 265
தென்மேற்கு மாவட்டம் 297
வட செபெராங் பிறை மாவட்டம் 709