பினாங்கு பாலர் பள்ளிகளை மேம்படுத்த சிறப்புக் குழு

பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் செயல்பட்டு வரும் தமிழ் பாலர் பள்ளிகளை மேம்படுத்தவும், பாலர் பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்களைக் களையவும், பினாங்கு மாநில அரசு டத்தோ அன்பழகன் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கவிருப்பதாக மலேசிய பாலர் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடந்த பயிற்சிக் கருத்தரங்கில் முடிவுரையாற்றிய மாநில துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார்.pix

நிகழ்வில் சிறப்புரையாற்றிய மாநில துணை முதல்வர் அவர்கள் பினாங்கு பாலர் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதற்குத் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தற்போது பினாங்கு மாநில அரசு பாலர் பள்ளிகளுக்கு ரிம100,000 உதவிநிதி வழங்கினாலும் தொகை போதாது என்றும் பாலர் பள்ளி ஆசிரியர்களின் தியாகத்திற்கு அங்கீகரிக்கும் பொருட்டு அவர்களின் சம்பளம், சேமநிதி பிடிப்பு, தொழிலாளர் பாதுகாப்பு காப்புறுதி போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

மேலும், பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புக்குழு தலைவர் டத்தோ அன்பழகனைத் தலைவராகக் கொண்டு பாலர் பள்ளி சங்க பிரதிநிதிகள், பள்ளிகளின் பிரதிநிதிகள் என்று குழுவில் இடம்பெறச் செய்து, மூன்று மாதத்திற்குள் பாலர் பள்ளிகளின் முழு விவரத்தை பள்ளியிலிருந்து பெற்று அதன் பிறகு பாலர் பள்ளிகளின் மேம்பாட்டிற்கான அறிவிப்பை செய்யப்போவதாக மதிப்பிற்குரிய இரண்டாம் துணை முதல்வர் தெரிவித்தார். நான்கு நாட்கள் நடைபெற்ற பயிற்சி கருத்தரங்கில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர். கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்குப் பயிற்சி சான்றிதழ் எடுத்து வழங்கினார் மதிப்பிற்குரிய ப.ராமசாமி அவர்கள்.

d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);