அந்நியத் தொழிலாளர்களுக்கான தொழிலாளர் விடுதி சட்டங்களை முறைப்படுத்தும் பரிந்துரையை அமைச்சர் வரவேற்றார் – ஜெக்டிப்

Admin

ஜார்ச்டவுன் – தொழிலாளர் விடுதிகளில் வெளிநாட்டவர்களுக்கு  தங்குமிடம் வழங்கும் சட்டத்தை முறைப்படுத்துவதற்கான பரிந்துரையை வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரீசல் மெரிக்கன் நைனா மெரிக்கன் வரவேற்றார் என வீட்டுவசதி, உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற & கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார்.

இந்த பரிந்துரையை அமைச்சரவை  ரீதியில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஏனெனில், கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தின் போது, ​​சுமார் 70 சதவிகிதம் தொற்று பணியிடங்களான தொழிற்சாலைகள் மற்றும் வெளிநாட்டினர் மூலம் வந்தவையாகும்.

மேலும், அந்நிய தொழிலாளர் தங்குமிடங்கள் தொடர்பான சட்டத்தை முறைப்படுத்துவதன் மூலம், தகுதிபெற்ற வாங்குநர்கள் மட்டுமே குறைந்த மற்றும் நடுத்தர விலை வீடமைப்புத் திட்டங்களில் வசிப்பர் முடியும், என்றார்.

“அந்நிய தொழிலாளர்களுடன் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் அவர்களின் சமூகநலனைப் பாதுகாக்கும் பொருட்டு இக்கொள்கையை அமல்படுத்த விரும்புகிறேன். தேசிய ரீதியில், பினாங்கு மாநிலம் அந்நிய தொழிலாளர்களுக்கு  தங்கும் விடுதிகள் அமைப்பதில் முன்னணி வகிக்கிறது.

“இப்போது, ​​கட்டப்பட்ட 11 வீடமைப்புத் திட்டங்களில் 70,000 பேருக்கு இடமளிக்கக்கூடும். மாநில அரசு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்கள் கொண்டு செயல்படுகிறது.

“தற்போது நிலவிவரும் கோவிட்-19 தொற்று பாதிப்பினைக் கையாளவும் எதிர்த்து போராடவும் இது ஒரு சிறந்த வழி என்பதை அனைவருக்கும்  அறிவுறுத்துறேன்,” என முகநூல் வாயிலாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜெக்டிப் இவ்வாறு சூளுரைத்தார்.

மேலும், உள்ளாட்சி பிரிவு மூத்த முதன்மை உதவி செயலாளர், நூர் ஆயிஷா மொஹமட் நோரோடின் மற்றும் பினாங்கு மாநில வீட்டுவசதி ஆணையத்தின் பொது மேலாளர் (LPNPP), அய்னுல் ஃபாதிலா சம்சுடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் கருத்து தெரிவித்த ஜெக்டிப், தற்போது உள்ள பொது வீடமைப்புத் திட்டங்களில் குடிமக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக தொடர்புடைய சட்டங்களை திருத்துவது அவசியம் என ரீசல் மெரிகான் பதிலளித்தார்.

“குறைந்த விலை, நடுத்தர விலை மற்றும் பொது வீடமைப்புத் திட்டங்களில் வெளிநாட்டவர்கள் இனி அனுமதிக்கப்படாமல் இருப்பதை காண விரும்புகிறோம்.

“இது ஒரு மத்திய அரசின் கூழ் இடம்பெறும் சட்டமாகும். எனவே, மத்திய அரசு வெளிநாட்டவர்களுக்கு மட்டுமல்ல, உள்ளூர் மக்களுக்கும் கூட குறைந்த மற்றும் நடுத்தர  விலை வீடமைப்புத் திட்டங்களில் வாடகைக்கு விடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.

“இந்த திட்டம் வாங்குபவர்களால் மட்டுமே வசிக்க அனுமதிக்க வேண்டும்,” என டத்தோ கெராமாட்  சட்டமன்ற உறுப்பினர்
கூறினார்.

சம்பந்தப்பட்ட சட்டங்களை திருத்தும் செயல்முறை 12 நடைமுறைகளை உள்ளடக்கியது மற்றும்  நீண்ட கால ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சட்டத்தை சீர்திருத்தம் செய்யுமாறு ஜெக்டிப் பரிந்துரைத்தார். இதன் மூலம், குறைந்த மற்றும் நடுத்தர  விலை வீடமைப்புத் திட்டங்களில் வாடகை விடுதல் தொடர்பான விவகாரங்களுக்குத் தீர்வுக்காணப்படும், என நம்பிக்கை தெரிவித்தார்.