காற்றழுத்த பலூன் விழா 2019 அதிகமான சுற்றுப்பயணிகளைக் கவரும் – முதல்வர்

பட்டர்வொர்த்- “ஐந்தாவது முறையாக நடைபெறும் பினாங்கு காற்றழுத்த பலூன் விழா 2019-ன் அறிமுகவிழா நடத்தப்படுவதன் மூலம் சுற்றுப்பயணிகளை ஈர்க்க முடியும். இந்த அறிமுக விழா தீவுப்பகுதியின் எக்ஸ்பிளணட் தலத்தில் மட்டுமின்றி பெருநிலப்பகுதியிலும்

நடத்தப்படுவதன் மூலம்  பினாங்கு என்பது தீவு மற்றும் பெருநிலத்தை சேர்ந்த இரு வெவ்வேறு இடங்கள் என்ற  வேறுப்பாடு அகற்றப்படுகிறது,” என இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்த மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஏறக்குறைய 150, 000 சுற்றுப்பயணிகள் வருகையளித்தனர் என்றால் மிகையாகாது. வருகின்ற பிப்ரவரி மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் பாடாங் போலோவில்

நடைபெறும் இவ்விழா உள்நாட்டு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுப்பயணிகளையும் வெகுவாக கவரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சுற்றுலா, பாரம்பரியம், கலை கலாச்சார மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் இயோ சூன் இன், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, பத்து லஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர்

ஒங் அ தியோங், பினாங்கு சுற்றுலாத் துறை தலைமை நிர்வாக அதிகாரி உய் சூக் யான் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த அறிமுக விழா பட்டர்வொர்த் அர்ட்வொர்க் தலத்தில் 400 மினி காற்றழுத்த பலூன்களில் பொருத்தப்பட்ட வண்ண விளக்குகளின் ஒளியுடன் தொடக்க விழாக் கண்டது.

இந்த மினி காற்றழுத்த பலூன்கள் பாலர்ப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளி மாணவர்களின்  கலை திறமையில் உருவாக்கப்பட்டன. மாநில அரசின் திட்டங்களில் பினாங்கு வாழ் மக்கள் பங்கு கொள்வதில் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார்.

இந்த 400 காற்றழுத்த பலூன் கண்காட்சி வருகின்ற மார்ச் மாதம் 30-ஆம் தேதி வரை பொது மக்களின் காட்சிக்கு  வைக்கப்படும்.