குடியிருப்புப் பகுதியில் உள்ள ஏர்.பி.என்.பி செயல்படுவதை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்படும் – ஜெக்டிப்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு ஊராட்சி மன்றத்தின் (பி.பி.தி) மூலம் குடியிருப்பு பகுதிகளில் தற்காலிக தங்கும்விடுதி (ஹோம்ஸ்தே) அல்லது ஏர்.பி.என்.பி (Airbnb) நடவடிக்கைகளை நிறுத்த நோட்டீஸ் அனுப்பப்படும்.

வீடமைப்பு, உள்ளாட்சி, நகர்ப்புற & கிராமப்புற மேம்பாட்டுத் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ, ஏர்.பி.என்.பி பிரிவுகளில் அனைத்து திருத்தங்கள் மற்றும் சேர்த்தல் அல்லது உள் மறுசீரமைப்பு உட்பட்டு நோட்டீஸ் வழங்கப்படும் என்று கூறினார்.

“இந்த அறிவிப்பு நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் சட்டம் 1976 பிரிவு 27 (2) (அ) இன் கீழ் நடவடிக்கைகளை நிறுத்தவும், முன்பு போலவே நிலம் அல்லது கட்டிடங்களை மீட்டெடுக்கவும் முடியும்.

“திருத்தங்கள் அல்லது அதிகரிப்புக்கு தொடர்புடைய வீடுகளுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ் சாலைகள், வடிகால்கள் மற்றும் கட்டிடங்கள் சட்டம் 1974 -யின் கீழ் வழங்கப்படும்.

“எனவே, நோட்டீஸ் வழங்கப்பட்டதும் சம்பந்தப்பட்ட வீடுகள் மீது இடிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று 14-வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் இரண்டாம் தவணை இரண்டாவது கூட்டத்தில் ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் செர்லீனா அப்துல் ரஷீத்தின் வாய்வழி கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

இதனிடையே, பிரிவு 32 (3) மற்றும் பிரிவு 70 (2), சட்டம் 757 இல் குறிப்பிட்டுள்ளது படி கூடுதல் துணை சட்டங்களை உருவாக்க கூட்டு மேலாண்மை அமைப்பு (ஜே.எம்.பி) மற்றும் மேலாண்மைக் கழகம் (எம்.சி) கவுன்சில் ஆகியவற்றிற்கு ஆலோசனை வழங்கப்படும் என்று ஜெக்டிப் கூறினார்.

“ஏனென்றால், தற்காலிக தங்கும் விடுதி அல்லது ஏர்.பி.என்.பி தொடர்பாக சட்டம் 757 இல் எந்தவிதமான விபரங்களும் இடம்பெறவில்லை.

“எனவே, பொதுவான கட்டிடத்தின் ஒழுங்குமுறை, மேலாண்மை, நிர்வாகம், பயன்பாடு ஆகியவற்றிற்கான பொதுக் கூட்டத்தில் ஒரு சிறப்புத் தீர்மானத்தின் மூலம் கூடுதல் துணைச் சட்டங்களை உருவாக்க ஜே.எம்.பி அல்லது எம்.சி பிரிவின் கீழ் அதிகாரம் அளிக்கப்படுகிறது.

“இதுதவிர, சட்டங்களை மீறும் எந்தவொரு உரிமையாளருக்கும் ஜே.எம்.பி அல்லது எம்.சி தரப்பினர் ரிம200ஐ விட அதிகமாக அபராதம் விதிக்க முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து மாநில அரசு வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சுடன் (கே.பி.கே.டி) கலந்தாலோசிக்கும் என்று ஜெக்டிப் தெரிவித்துள்ளார்.

“அடுத்த நடவடிக்கையாக குடியிருப்புப் பகுதிகளில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பற்றி முழுமையான வழிகாட்டுதல்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது, ,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஒரு நிர்வாக அமைப்பானது பிரிவு 70 (2), ஸ்ராட்டா நிர்வாக சட்டம் 2013 (ஏ.பி.எஸ்) இன் கீழ் ஓர் அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் மீது குறுகிய கால குத்தகை தடை விதிக்க அதிகாரம் உண்டு. மத்திய நீதிமன்றம் இன்னாப் சலீல் & ஆர்ஸ் வெர்வ் வழக்குக்கு எதிராக மோண்ட் கியாரா மேனேஜ்மென்ட் கார்ப்பரேஷன் (2020) தீர்ப்பில் இவ்வாறு கூறப்பட்டது.