சுங்கை கெச்சில் தோட்ட நிலப் பிரச்சனை சுமூகமான தீர்வைக்காணும் – பேராசிரியர் நம்பிக்கை

Admin

நிபோங் திபால் – அண்மையில் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி சுங்கை கெச்சில் நில விவகாரம் தொடர்பாக நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அந்த சந்திப்புக் கூட்டத்தில் தற்போது நில உரிமையாளர்கள் நிலத்தை பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு விற்கத் தயாராக இருப்பாதாக பேராசிரியர் ப. ராமசாமி தெரிவித்தார்.

இந்த நிலத்தை ஒரு நியாயமான விலையில் கொள்முதல் செய்வதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளன.

எனவே, இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தி இந்த கொள்முதல் மற்றும் விற்பனை செயல்முறைகளில் இருந்து சிறந்த தீர்வு காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலத்தின் சந்தை விலை ரிம2 மில்லியன் ஆகும். ஆனால், அந்நில உரிமையாளர் அதிக விலைக்கு விற்பதால்
இச்சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்து அறப்பணி வாரியம்,
சுங்கை கெச்சில் தோட்டத்தில் வாழும் 23 குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் கிடைக்க கலந்தாய்வு கூட்டத்தை நேற்று சென் செபராங் பிறை மாவட்ட காவல்துறை அதிகாரி முன்னிலையில் நடத்தியது. இந்த கூட்டத்தை பேராசிரியர் ப.இராமசாமி தலைமையேற்றார்.

2.4 ஹெக்டர் நிலப்பரப்பில் வாழும் வசதிக்குறைந்த குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தரும் முயற்சியில் மாநில அரசு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தலைமையில் களம் இறங்கியுள்ளது.

‘Bailiff’ நோட்டிஸ் முன்னதாக
அக்டோபர்,7 அமல்படுத்த அறிவிக்கப்பட்டது. எனினும், அந்த நோட்டீஸ் அமல்படுத்த அக்டோபர்,12 வரை கால அவகாசம் வழங்கியதாகவும் கூறினார்.

இக்குறுகிய காலக்கட்டத்தில் நில உரிமையாளர் பிற தரப்பினர் குறிப்பாக வழக்கறிஞர்
துணையின்றி நேரடியாக இந்து அறப்பணி வாரியத்துடன் இணைந்து சுமூகமாக தீர்வைக்காண முற்பட வேண்டும்.

அந்நில உரிமையாளர் உடனான பேச்சுவார்த்தை சுமூகமான தீர்வை எட்டினால் அத்தளத்தில்
பி40 குழுவை சார்ந்த வசதிக்குறைந்த குடும்பங்களுக்கு மலிவுவிலை வீட்டை மாநில அரசு கட்டிதரும் என பேராசிரியர் நம்பிக்கை தெரிவித்தார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினர் அமர் பிரதிபால், செபராங் பிறை மாநகர் கழக உறுப்பினர்களான டேவிட் மார்ஷல் மற்றும் ஜெசன் இராஜ் ஆகியோர் கலந்து பொதுமக்களுக்கு ஆதரவை நல்கினர்.