தொற்றுநோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் துரிதப்படுத்த Pgcare Alliance கூட்டமைப்பு அறிமுகம்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு, அரசு சாரா நிறுவனங்கள், தொழில்துறை நிறுவனங்கள், மற்றும் நிபுணர்களின் ஒருங்கிணைப்பில் ‘Pgcare Alliance’ எனும் கூட்டமைப்பு திட்டம் அறிமுகம் கண்டது. இத்திட்டம் கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் உடனடியாக வழங்க துணைபுரிகிறது.

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் பொது மக்களின் சமூகநலனை தொடர்ந்து பாதுகாக்க ‘Pgcare Alliance’ எனும் திட்டத்தை இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

“கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட்-19 தொற்றுநோய் தாக்கம் பொது மக்களின் வாழ்வாதாரம் மட்டுமின்றி மனநலமும் மிகவும் பாதித்துள்ளது. பணி நீக்கம்; வருமான இழப்பு; சுகாதாரப் பிரச்சனை; குடும்ப சூழல் மற்றும் பல கூறுகள் பொது மக்களின் மனநலத்தை பாதிக்கப்பட்டு வருகிறது.

“பினாங்கு மாநிலம் தேசிய மீட்சி திட்டத்தில் இரண்டாம் கட்டம் நுழைந்திருந்தாலும் பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக மீண்டும் முன்னேற்றம் காண தொடர்ந்து முயற்சிப்பதாக,” முதல்வர் தெரிவித்தார்.

“எனவே, மாநில அரசு பல்வேறு அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து ஒரு ஆற்றல் மிக்க கூட்டமைப்பை உருவாக்கி
இந்த தொற்றுநோய் காலத்தில் இலக்கு குழுவினருக்கு தேவைப்படும் உதவிகள் உடனடியாக வழங்கப்படுவதை உறுத்ஜி செய்யும்,” என முதல்வர் Pgcare Alliance துவக்க விழாவில் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியில் PgCare Alliance கூட்டமைப்பின் தலைவரும் சுற்றுச்சூழல் மற்றும் சமூகநலன் ஆட்சிக்குழு உறுப்பினருமான பீ பூன் போ, ; சுற்றுலா மற்றும் புத்தாக்க பொருளாதாரம் ஆட்சிக்குழு உறுப்பினரும் PgCare Alliance துணை தலைவருமான, யோ சூன் ஹின்; கொம்தார் சட்டமன்ற உறுப்பினரும் PgCare Alliance துணைத் தலைவருமான தி லாய் மற்றும் PgCare Alliance
குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்குதல் எனும் பினாங்கு2030 இலக்கை நோக்கி இத்திட்டம் நான்கு பிரதான கூறுகள் அடிப்படையில் செயல்படுத்தப்படும், என
PgCare Alliance திட்டத்தின் ஆலோசகரான மாநில முதலவர் சாவ் தெரிவித்தார்.

இத்திட்டத்தில் கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பொது மக்களின் மனநல பாதுகாப்பு, வேலை வாய்ப்பு, குடியிருப்பு மற்றும் உணவு உதவி மற்றும் நிதியுதவிக்கு முன்னுரிமை அளித்து உதவிகள் நல்கப்படும்.

இந்த Pgcare Alliance கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரு நடுநிலையான மற்றும் சமத்துவம் மிக்க தளமாக இடம்பெற்று உதவுகள் வழங்கப்படும்.

இது வரை இந்த கூட்டமைப்பில் 18 அரசு சாரா நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கூடிய விரைவில் ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் தளம் அமைக்கப்படும்.

இந்த காலக்கட்டத்தில், மாநில அரசுடன் இணைந்து கோவிட்-19 தாக்கத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உதவி வரும் அரசு சாரா நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அனைத்து துறைகளுக்கும் நன்றிக்கூற கடமைப்பட்டுள்ளேன்.

மேல் விவரங்களுக்கு, www.PgCareAlliance.com எனும் அகப்பக்கத்தை அல்லது pgcarealliance என்ற முகநூலை அணுகலாம்.