“நான் பினாங்கை நேசிக்கிறேன்” எனும் பிரச்சார நெடுவோட்டத்தில் 10,000 பொது மக்கள் கலந்து கொண்டனர்

Admin
“நான் பினாங்கை நேசிக்கிறேன்” பிரச்சார ஓட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள்

மாநில அரசு அண்மையில் துவக்கிய நான் பினாங்கை நேசிக்கிறேன்எனும் பிரச்சாரத்தை முன்னிட்டு பீச்ட் சாலையில் இருந்து 6 கிலோ மீட்டருக்கு நெடுவோட்டம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் பினாங்கு மாநில முதல்வர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினருடன் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பினாங்கு வாழ் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த பங்கெடுப்பின் வழி பினாங்கு வாழ் மக்கள் தத்தம் அவர்களின் மாநிலத்தை எவ்வாறு நேசிக்கின்றனர் என்பது வெளிபடையாக புலப்படுகிறது. மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் இந்த நெடுந்தூர ஓட்டத்தை பொது மக்களுடன் இணைந்து 6 கிலோ மீட்டர் ஓடி முடித்தார் என்பது பாராட்டக்குறியதாகும். ‘என் வயதிற்கு இந்த 6 கி.மீ ஓட்டம் சாத்தியமானது அல்ல; எனினும் பினாங்கு மாநிலத்தை நேசிக்கும் எண்ணம் கொண்டுள்ளதால் இது சாத்தியமாகியுள்ளது‘, என தமதுரையில் குறிப்பிட்டார்.