பினாங்கு மாநிலத்தில் சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகம் முழுமையாக மீட்டமைக்கப்பட்டுள்ளது

Admin
KETUA Menteri

ஜாவி- பினாங்கு மாநில 660,000 நீர் பெறுநர்கள் சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகம் முழுமையாக மீட்டமைக்கப்பட்டுள்ளது என்று பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP) இன்று காலை 11.00 மணியளவில் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், நேற்று வரை தீவில் சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டதாகக் கூறப்படும் மூன்று குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உயரமான மலைப்பகுதிகளில் இருப்பதால் இது ஏற்படக்கூடும் என்று இன்று காலை நிருபர்களின் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.

“சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோக அமைப்பில் பல்வேறு தொழில்நுட்பப் பிரச்சனைகள் எழுந்துள்ளன. மேலும், ‘பம்ப் ஹவுஸ்களில்’ இருக்கும் புக்கிட் டும்பார் தண்ணீர் தொட்டிகள் விநியோகிக்கப்படுவதற்கு முன்பு சுத்திகரிக்கப்பட்ட நீரால் நிரப்பப்பட வேண்டும். அதற்குப் பின்னரே பயனீட்டாளர்களுக்கு நீர் விநியோகம் செய்ய முடியும்.

“சில நேரங்களில், சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு பம்ப் ஹவுஸ் வேலை செய்யாமல், குழாய்களுக்கு நீர் அழுத்தம் பெற முடியாமல் நீர் விநியோகத் தடை ஏற்படக்கூடும்.

மேலும், சுத்திகரிக்கப்பட்ட நீர் முதலில் தாழ்வானப் பகுதிகளை சென்றடைந்தப் பின்னர் அதன் தாழ்வான பகுதி நீர் அழுத்தம் அதிகரிக்கும் போது அதிக உயரத்தில் அல்லது மலைப் பகுதிகளில் உள்ள இடங்களுக்கு நீர் விநியோகம் செய்ய முடிகிறது,” என்று அவர்
நிபோங் திபால் அரேனா மேம்பாட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை தொடக்கி வைத்து செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

முன்னதாக, PBAPP தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஜாசானி மைடின்சா ஜூலை, 6 காலை 6.00 மணியளவில், சுங்கை மூடாவிலிருந்து (சுங்கை டுவா கால்வாய் வழியாக) சுத்திகரிப்பு நிலையத்திற்கு பம்ப் செய்யப்பட்ட மூல நீரின் கொந்தளிப்பு 3,000 Unit Kekeruhan Nephelometric (NTU) பதிவாகியுள்ளது, என்றார். எனவே, சுங்கை டுவா நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் (LRA) இயக்கத்தை நிறுத்தப்பட்டதால் முன்னதாகவே தண்ணீர் விநியோகம் தடைப்பட்டது.