பினாங்கு மாநிலத்தை டிஜிட்டல்மயமாக்க ரிம4.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தை டிஜிட்டல்மயமாக்க, மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ், மாநில அரசின் துணை நிறுவனமான டிஜிட்டல் பினாங்கிற்கு அடுத்த ஆண்டு ரிம4.5 மில்லியன் தொகையை மானியமாக வழங்க நிர்ணயித்துள்ளது.

இன்று பினாங்கு மாநில சட்டமன்ற கூட்டத்தொடரில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தைத் தாக்கல் செய்யும் போது கொன் இயோவ் இதனை அறிவித்தார்.

“மாநில அரசு, கூட்டணி சேவைத் துறை மற்றும் வெளிப்புற வளங்கள், ‘ஆராய்ச்சி & மேம்பாடு’ (R&D) மற்றும் ”Embedded Software’ ஆகிய துறைகளில் கவனம் செலுத்துவதைத் தவிர மாநிலத்தின் புதிய பொருளாதார மேம்பாடாக விளங்கும் டிஜிட்டல் பொருளாதாரத் துறையையும் வழிநடத்த உறுதிபூண்டுள்ளது,” என சாவ் விளக்கினார்.

மேலும், பாடாங் கோத்தா மாநில சட்டமன்ற உறுப்பினருமான கொன் இயோவ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI), ‘big data’, Internet of Things
(IoT), ‘Integrated Circuit'(IC) வடிவமைப்பு போன்ற புதிய தலைமுறை தொழில்நுட்பத்திலும் கவனம் செலுத்தும் என்று கூறினார்.

“டிஜிட்டல் பொருளாதார துறையில் AMD Global Services, Clarivate, Citigroup, Jabil, Teleperformance, Synapse, Starfive, UST Global போன்ற நிறுவனங்களின முதலீடுகளின் முதலீடுகள், இதுவரை பினாங்கு மாநிலத்தில் 16,000க்கும் அதிகமான வேலைகளை உருவாக்கி இருக்கிறது, என்று அவர் கூறினார்.

பினாங்கு 2023 வரவு செலவு தாக்கலில் இந்த மாநிலத்தில் தொழில் முனைவோர் பிரச்சாரத்தை மேலும் வலுப்படுத்த ரிம1.66 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும் கொன் இயோவ் தெரிவித்தார்.

மாநில அரசு ‘தொழில்முனைவோர் ஒரு கலாச்சாரம்’ என்ற பிரச்சார முழக்கத்தைத் தொடங்கியுள்ளது. இந்த தொழில்முனைவோர் திட்டம் ஜூலை 2022 முதல் ஜூன் 2023 வரை தொடரும்,” என்று பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் தெரிவித்தார்.