ஜார்ச்டவுன் – 2024 ஆம் ஆண்டில் நிதி அமைச்சிடம் (MOF) ரிம100 மில்லியன் முன்பணத்திற்கான விண்ணப்பமானது, நடப்பு ஆண்டிற்கான மாநில அரசின் திட்டமிடப்பட்ட பற்றாக்குறையை ஈடுகட்டப்படும்.
பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறுகையில், மாநில அரசுக்கு உதவுவது மத்திய அரசின் பொறுப்பாகும் என்று மத்திய அரசியலமைப்பின் பிரிவு 109 (6) இன் விதிகளுக்கு இணங்க இந்த விண்ணப்பம் அமைவதாகக் குறிப்பிட்டார்.
“மத்திய நிதி அமைச்சு முன்பணத்தை வழங்குவதன் மூலம், மாநில அரசுக்கு வழங்கும் மானியத்தைக் குறைக்கும்.
“இந்த நிதிக் குறைப்பில் நான்கு மானியங்கள் உள்ளடங்கும். அதாவது தனிநபர் மானியம், சேவை கட்டணம், கூட்டுப் பட்டியல் மற்றும் ‘TAHAP’ மானியம் ஆகும். இது 2027 ஆம் ஆண்டில் ரிம33 மில்லியன், 2028 (ரிம33 மில்லியன்) மற்றும் 2029 (ரிம34 மில்லியன்) ஆகியவை இடம்பெறுகிறது,” என்று அவர் 15வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் மூன்றாவது தவணையின் முதல் கூட்டத்தில் வழங்கிய தொகுப்புரையில் புக்கிட் தெங்கா மாநில சட்டமன்ற உறுப்பினர் கூய் ஹ்சியாவோ-லியுங்கின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினரான கொன் இயோவ், முன்பணத்தின் அளவு நிதியமைச்சின் விதிக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்வதற்காக, மாநில அரசு முன்பணத்தை வருவாய் அல்லாத ரசீதாக அங்கீகரிக்கத் தொடங்கும் என்று கூறினார்.
“இந்தத் தொகையில் 2027 ஆம் ஆண்டில் வருவாய் அல்லாத ரிம33 மில்லியன், 2028 (ரிம33 மில்லியன்) மற்றும் 2029 (ரிம34 மில்லியன்) ஆகியவை அடங்கும்” என்று அவர் கூறினார்.