ஜார்ச்டவுன் – பொது சேவை ஊதிய முறை 2024, டிசம்பர் முதல் நடைமுறைக்கு வரும். பொது சேவை ஊதிய முறை (SSPA) இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.
“முதல் கட்டமாக, இந்த ஆண்டு டிசம்பரில் செயல்படுத்தப்படும். இதில் 8% ஊதிய உயர்வு வழங்கப்படும். அதே நேரத்தில் இரண்டாம் கட்டம் 2026,ஜனவரி மாதத்தில் கூடுதலாக 7% அதிகரிப்பு வழங்கப்படும். மொத்தத்தில், பொது சேவை ஊழியர்கள் ஊதியம் இதன் வாயிலாக 15% சம்பள உயர்வை பெறுவர்.
“ஊராட்சி மன்றங்கள் மற்றும் மாநில சட்டப்பூர்வ அமைப்புகளின் கீழ் உள்ளவர்களைத் தவிர்த்து மொத்தம் 3,534 மாநில அரசு ஊழியர்கள் இந்தப் புதிய ஊதிய முறைக்கு உட்படுத்தப்படுவர்.
ஆயிர் பூத்தே சட்டமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, பினாங்கு 2025 வரவு செலவு திட்டத்தில் முதல் கட்ட ஊதிய அதிகரிப்பின் நிதி தாக்கங்கள் கணக்கிடப்பட்டுள்ளன என்பது உறுதி செய்யப்பட்டது.
முதல் கட்ட ஊதிய கட்டணத்திற்கான கூடுதல் செலவு ரிம15.6 மில்லியன் ஆகும்.
“2026 ஆம் ஆண்டில், நிதி செலவினம் ரிம13.2 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 15% ஊதிய உயர்வு ரிம28.8 மில்லியனுக்கு ஆதரவளிப்பதற்கான மொத்த செலவைக் குறிக்கிறது” என்று சாவ் விளக்கமளித்தார்.