அஞ்சலட்டை ஓவியப் போட்டி

படம் 1: அஞ்சலட்டை ஓவியப் போட்டி வெற்றிப் பெற்ற படைப்புகளுடன் தேர்வுக்குழுவினர்.
படம் 1: அஞ்சலட்டை ஓவியப் போட்டி வெற்றிப் பெற்ற படைப்புகளுடன் தேர்வுக்குழுவினர்.

முத்துச் செய்திகள் நாளிதழ் சிறுவர்களுக்கான அஞ்சலட்டை ஓவியப் போட்டி (Peraduan Lukisan Poskad) ஆகஸ்டு முதல் டிசம்பர் மாதம் வரை நடத்தியது. இப்போட்டியில் பன்னிரண்டு வயதுக்குக் கீழ்ப்பட்ட மற்றும் பொதுப் பிரிவு என இரண்டு பிரிவுகளாக நடத்த இப்போட்டியில் நிறைய பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிக்காக பினாங்கு மாநிலம் முழுவதிலிருந்தும் அதிகமான படைப்புகள் அனுப்பப்பட்டன. இப்போட்டியில் பல இன போட்டியாளர்கள் பங்கேற்றது பினாங்கு மாநில மக்களிடையே உள்ள ஒற்றுமையைப் பிரதிபலிக்கின்றது.

படம் 2: அஞ்சலட்டை ஓவியப் போட்டி படைப்புகள்.
படம் 2: அஞ்சலட்டை ஓவியப் போட்டி படைப்புகள்.

சிறந்த அஞ்சலட்டை ஓவியப் போட்டிக்கான வெற்றியாளர்கள் அடையாளம் காணும் நிகழ்வு மாநில முதல்வர் தகவல் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முடிவுகளை பினாங்கு முதல்வர் அலுவலக பிரத்தியேக செயலாளர் திருமதி விஜயலட்சுமி மற்றும் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவின் நில விவகாரம், நில மேம்பாடு, விளக்கம், பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் கலை உதவி இயக்குநர் முகமாட் ஃபரிஸ் ஒஸ்மான் ஆகியோர் தேர்வு செய்தனர். அனைத்து படைப்புகளும் “பினாங்கு மாநிலம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற படைப்புகளில் மூன்று வயது சிறுவனின் படைப்பு இடம்பெற்றது பாராட்டக்குறியதாகும்.

அஞ்சலட்டை ஓவியப் போட்டிக்கானப் பரிசளிப்பு விழா விரைவில் நடைபெறும் என ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர். வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வின் விபரங்களை ஏற்பாட்டுக்குழுவினர் தொலைபேசியின் மூலம் அழைத்து தெரியப்படுத்துவர். அஞ்சலட்டை ஓவியப் போட்டி 2014-யின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வெற்றியாளருக்கு தத்தம் ரிம 500, ரிம 300, ரிம 150-ம் மற்றும் 5 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்.