அனைத்துலக நீர்மிதவை போட்டி 2013.

7-வது முறையாக பினாங்கு அனைத்துலக நீர்மிதவை(Skimboarding) போட்டி  பத்து பிரிங்கியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அஸ்திரேலியா, புருணாய், யுணாய்டேட் கிங்டம், அமெரிக்கா, தாய்லாந்து, பிலிபின்ஸ், தாய்வான், ஹொங் கோங் மற்றும் மலேசியாவிலிருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டி இரண்டு நாட்களுக்கு பத்து பிரிங்கி கடற்கரையில் நடைபெற்றது. இப்போட்டி 12 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட்டது. இந்த போட்டிக்கு நீர்மிதவை கழகம், பினாங்கு விளையாட்டு மன்றம் மற்றும் இளைஞர், விளையாட்டு, மகளிர், குடும்பம் மற்றும் சமூகப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினரும், பாடாங் லாலாங் சட்டமன்ற உறுப்பினருமான சோங் எங் ஆதரவோடு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் வெற்றிப் பெற்ற வெற்றியாளர்கள் பரிசு காசோலையுடன் படத்தில் காணலாம்
போட்டியில் வெற்றிப் பெற்ற வெற்றியாளர்கள் பரிசு காசோலையுடன் படத்தில் காணலாம்

நிகழ்வில் வரவேற்பு உரையாற்றிய மதிப்பிற்குறிய சோங் எங் அவர்கள் இப்போட்டிக்கு ஆதரவு நல்கிய காவல்துறையினர், தீயணைப்புப்படையினர், கடற்படையினர் மற்றும் பினாங்கு மாநகராட்சி ஊழியர்கள் என அனைவருக்கும் தமது நன்றியை தெரிவித்தார். இந்த ஆண்டிற்கானக் கருப்பொருள் “கடற்கரையைத் தூய்மை செய்வோம்” என்பதாகும். கடற்கரையைத் தூய்மையாக வைத்திருப்பது அனைவரின் கடமையென்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். இப்போட்டியின் வழி கடற்கரையின் தூய்மையை மேம்படுத்த முடியும் என்பதால் இது ஒரு சிறந்த போட்டி என்றும் பாராட்டினார். இதனிடையே, பெண் விளையாட்டாளர்களின் எண்ணிக்கை வரும் காலங்களில் இன்னும் அதிகமாகும் என மேலும் நம்பிக்கை தெரிவித்தார். வெற்றியாளர்களுக்கு மூன்று நிலைகளில் பரிசுகள் வழங்கப்பட்டன.

அதோடு, இந்நிகழ்வில் இசை விழா, BMX செய்முறை, நீண்ட நீர்மிதவை செய்முறை ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றன என்பது சாலசிறந்தது.