ஆதரவற்றகளுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்.

 நிதியுதவி பெற்றுக்கொண்டவர்களுடன் பாயா தெருபோங் சட்டமன்ற உறுப்பினர் இயாவ் சூன் இன்
நிதியுதவி பெற்றுக்கொண்டவர்களுடன் பாயா தெருபோங் சட்டமன்ற உறுப்பினர் இயாவ் சூன் இன்

பொது மக்கள் மருத்துவ நிதியுதவி நாடுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களுக்கு காசோலை வழங்கிய பாயா தெருபோங் சட்டமன்ற உறுப்பினர் இயாவ் சூன் இன் தெரிவித்தார்.
கடந்த 25/4/2016-ஆம் நாள் நிதியுதவி வழங்கும் நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினருடன் திரு கோவலன், சிறுமி லில்லி ரூபாவதி மற்றும் லிம் சியாவ் பான் கலந்து கொண்டனர். இம்மூவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இயாவ் சூன் இன் உதவியை நாடினர்.
பாதுகாவலராகப் பணிப்புரிந்த திரு கோவலன்,29 கடந்த 1/2/2016-ஆம் நாள் ஏற்பட்ட சாலை விபத்தில் தனது இடதுப்புற கண் பகுதியில் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டது. இடது கண் பார்வையின்றி சிரமம் எதிர்நோக்கும் அவர் வலது கண்ணும் செயலிழக்கத் தொடங்கியதாக மிக வருத்தத்துடன் தெரிவித்தார். தற்போது தனது மனைவி திருமதி கோகிலவாணி பகுதிநேரமாகப் பாதுகாவலாக வேலைச் செய்துக் கொண்டே 2 வயது நிரம்பிய குழந்தையையும் கவனித்துக் கொள்வதாகக் கூறினார்.
சிறுவயது முதல் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி ரூபாவதியின் மாதந்திர சிகிச்சைக்கு ரிம600 தேவைப்படுவதாக அவரது தந்தை திரு கிருஷ்ணன் கூறினார். இச்சிறுமி தினமும் ஊட்டச்சத்து மிக்க பால் அருந்துவதோடு “இன்சுலின்” எனும் மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பாதுகாவலராகப் பணிப்புரியும் திரு கிருஷ்ணன் மாதாந்திர வருமானமாக ரிம1,400 மட்டுமே பெறுவதால் தனது பிள்ளையின் சிகிச்சை செலவுகளுக்கு பொது மக்களின் உதவியை நாடுகிறார்.
‘Systematic Lupus Erythematosus’ எனும் நோயினால் பாதிக்கப்பட்ட லிம் சியாவ் பான், 26 தனது இரு சிறுநீரகமும் செயலிழந்து வாரத்திற்கு மூன்று முறை கூழ்மப்பிரிப்பு சிகிச்சையை மேற்கொள்வதாகக் கூறினார். புத்தர் மேரிட் சிசு சீ சங்கம், போ ஈ ‘இமோடைலிசிஸ்’ சங்கம் இணைந்து இப்பெண்மணியின் சிகிச்சை செலவினை ஏற்றுக்கொள்கின்றன. உடல் நல குறைப்பாடு ஒரு காரணமாகக் கருதாமல் லிம் தொடர்ந்து வாவாசான் பல்கலைக்கழகத்தில் வியாபாரத் துறையில் இளங்கலை பட்டப்படிப்பு மேற்கொள்கிறார்.
தனது சட்டமன்ற அலுவலகத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட இம்மூவருக்கும் மாநில அரசின் பொருளாதார சமத்துவத் திட்டத்தில் நிதியுதவிக் கோருவதாகக் கூறினார் இயாவ். மேலும் தனது தொகுதி நிதியிலிருந்து ஒவ்வொருக்கும் தலா ரிம500 உதவித்தொகை வழங்குவதாக மேலும் தெரிவித்தார்.பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட விரும்பும் பொது மக்கள் தனது சேவை மையத்தை 04-827 8868 எனும் தொலைப்பேசியில் தொடர்புக்கொள்ளுமாறுக் கேட்டுக் கொண்டார்