ஆலயம் செல்வோம் திட்டம் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகத் திகழும் – தர்மன்

Admin
alayam selvom

தஞ்சோங் பூங்கா – மலேசிய இந்து சங்கம் புக்கிட் பெண்டேரா பேரவை ஏற்பாட்டில் மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில கவுன்சில், ஆயிரவைசியர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், அசாட் தமிழ்ப்பள்ளி, MyManavar திட்ட ஒத்துழைப்புடன் அண்மையில் “ஆலயம் செல்வோம்” நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது.

ஆலயம் செல்வோம் திட்டமானது இளம் தலைமுறையினருக்கு சமூக, ஆன்மீக மற்றும் சமய மீது பற்றை வளர்ப்பதற்கும் கோயிலுக்குச் செல்ல ஊக்குவிக்கும் ஒரு சிறப்பு அம்சமாக ஏற்று நடத்தப்பட்டது என மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவையின் தலைவர் தர்மன் குறிப்பிட்டார்.

“மேலும், இந்து கோவில்களை சமூக மையமாக உருமாற்றம் காண மலேசிய இந்து சங்கம் இந்த முன்முயற்சியை எடுத்துள்ளது. இதனிடையே இளைய தலைமுறையினர் இறை வழிபாட்டிலும் சமயம் பற்றிய பொது அறிவையும் மேலோங்க இத்திட்டம் சிறந்த வழிக்காட்டியாக திகழும்,” என தர்மன் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அசாட் தமிழ்ப்பள்ளியை சேர்ந்த 70 மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கெடுத்து இறைவனுக்கு சீர் செய்து சிறப்பு வழிப்பாட்டிலும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இந்நிகழ்ச்சியினை மலேசிய இந்து சங்கம் செபராங் ஜெயா கவுன்சில் தலைவரும் பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஆணையருமான சிவஶ்ரீ விவேக ரத்ன தினேஸ் வர்மன் குருக்கள் மற்றும் வழிநடத்தினர்.

alayam selvom 2
ஆயிரவைசியர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் மலேசிய இந்து சங்கம் புக்கிட் பெண்டேரா பேரவையின் இந்நடவடிக்கையை அந்த ஆலயத் தலைவர் டத்தோ ஶ்ரீ செல்வகுமார் பாராட்டினார். மேலும் இன்னும் வரும் காலங்களில் இம்மாதிரியான மதம், சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக கோடிக்காடினார்.