உடல் ஊனமுற்றோருக்கு இலவச சக்கர நாற்காலி வழங்கினர்.

பினாங்கு கொம்தார் லையன் கிலாப், பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் சாவ் கொன் இயாவ், சுங்கை புயூ சட்டமன்ற உறுப்பினர் பீ புன் போ, தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் எங் வெய் அய்க், கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பெங்காலான் கொத்தா சட்டமன்ற உறுப்பினர் லாவ் கெங் ஈ ஆகியோரின் இணை ஏற்பாட்டில் உடல் ஊனமுற்ற சிறுவர்கள், இளையோர் மற்றும் மூதியோர் அனைவருக்கும் இலவச சக்கர நாற்காலி வழங்கினர்.

இந்நிகழ்வின் முக்கிய நோக்கமானது ஏழை மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு உதவி கரம் நீட்டுவதாகும்.இந்த உதவியை மொழி, பால் பாராமல் பினாங்கு வாழ் குடிமக்களுக்குச் சரிசமமாக அளித்தனர். இலவச சக்கர நாற்காலி உடல் ஊனமுற்ற அனைத்து பள்ளிக்கூடம் செல்லும் சிறுவர்கள், வேலைக்குச் செல்லும் இளையோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என அனைவருக்கும் இலவசமாக வழங்குவதை கனவாக கொண்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர். இதன் மூலம், இவர்கள் மற்றவர்களைப் போல் இயல்பான வாழ்க்கையினை வாழ வித்திடுகிறது. இத்தொண்டைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கவிருப்பதாக மேலும் கூறினர். இவ்வாண்டு தலா 100 பேருக்கு இலவச சக்கர நாற்காலி பினாங்கு ஆளுநர் டத்தோ ஸ்ரீ உத்தாமா டாக்டர் ஹாஜி அப்துல் ரஹ்மான் பின் ஹாஜி அப்பாஸ் பொற்கரத்தால் எடுத்து வழங்கினார்.

இலவச சக்கர நாற்காலி அன்பளிப்பாக பெற்றவர்கள்:

  1. ரெலாவ் சாரிஸ் இல்லம்

  2. சில்வர் ஜுபிலி இல்லம்

  3. பினாங்கு குழந்தை பராமரிப்பு இல்லம்

  4. பினாங்கு மூத்த குடிமக்கள் பராமரிப்பு இல்லம்

  5. ஏடன் உடல் ஊனமுற்றோர் சேவை மையம்

இலவச சக்கர நாற்காலி அன்பளிப்பாக பெற்றோருக்கு சான்றிதழ், புகைப்படம் போன்றவையும் உடன் வழங்கினர்.

இலவச சக்கர நாற்காலி பெற்றோருடன் பினாங்கு ஆளுநர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்.
இலவச சக்கர நாற்காலி பெற்றோருடன் பினாங்கு ஆளுநர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்.