தெலோக் கும்பாரில் மலிவுவிலை வீடமைப்புத் திட்டம்

Admin

பினாங்கு மாநிலத்தில் மலிவுவீடுகள்பற்றாக்குறையாக இருப்பதாக பினாங்கு மேம்பாட்டுக் கழகச் சொத்துடைமை தனியார் நிறுவனத்தின் (PDC Properties Sdn. Bhd) தலைவர் வோங்ஹொன்வேய்அறிவித்தார். எனவே, தெலோக் கும்பாரில் நடுத்தர மற்றும்குறைந்தநடுத்தரவிலைகொண்ட அடுக்குமாடி வீடுகள் 694 யூனிட்கள் கட்டப்பட்டவுள்ளதாக மேலும் அவர் அறிவித்தார்.

பாயான் பாருவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்வோங் ஹொன் வேய், உயர் மேலாளர் தான் இயாவ் சோங் மற்றும் கட்டட வடிவமைப்பாளர் ஜோனி உய் கலந்து கொண்டனர். இத்திட்டத்திற்காக 5.8 நிலப் பரப்பை தெலோக் கும்பார் புஸ்பாகோம் முன்புறம் ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்த நடுத்தர விலை கொண்ட அடுக்குமாடி வீடுகள் 348-யூனிட்கள் மற்றும் நடுத்தர அடுக்குமாடி வீடுகள் 346-யூனிட்கள் இவ்வாண்டு இறுதியில் தொடங்கி இன்னும் மூன்று ஆண்டு காலத்தில் கட்டப்படவுள்ளதாக மேலும் அறிவித்தார்.

 மாநில அரசு குறைந்த வருமானம் கொண்ட மக்களும் மலிவு வீடுகளை வாங்கும் பொருட்டு தனது ஒதுக்கீடு நிதியான ரிம 500 மில்லியன் இருந்து பயன்படுத்தப்படும். 1970-ஆம் முதல் 1990-ஆம் ஆண்டு வரை பினாங்கு மேம்பாட்டுக் கழகச் சொத்துடைமை தனியார் நிறுவனத்தின் மூலம் 42 வீடமைப்பு திட்டத்தின் வழி சுமார் 15,000 வீடுகள் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதனைத் தொடரும் முயற்சியில் பத்து காவான், தெலோக் கும்பார் மற்றும் ஜாலான் எஸ்.பி செல்லையா போன்ற பகுதிகளில் மலிவு அடுக்குமாடி வீடுகள் கட்டுமான திட்டத்தைப் பாராட்டக்குறியதாகும்.

பத்து கவான் மாதிரி வீடமைப்பு வரைப்படத் திட்டத்தைக் காண்பிக்கின்றார் ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹொன் வேய்.
பத்து கவான் மாதிரி வீடமைப்பு வரைப்படத் திட்டத்தைக் காண்பிக்கின்றார் ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹொன் வேய்.